உலக கிரிக்கெட்

ஜோ ரூட் இல்லை.. உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் தற்போது இவர்தான் – ஆஸி ரிக்கி பாண்டிங் கணிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரிக்கி பாண்டிங் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் இவர்தான் என்று தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில் 3 போட்டியிலும் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்தது. இதில் இங்கிலாந்து அணியில் மிடில் வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன் ஆன ஹாரி புரூக் மிகச் சிறப்பாக விளையாடி முதல் டெஸ்ட் போட்டியில் 171 ரன்கள், அதற்குப் பிறகு விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 123 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 55 ரன்கள் என மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் தற்போது வரை எட்டு சதங்கள் அடித்து ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் மற்றொரு சக இங்கிலாந்து வீரரான ஜோ ரூட்டை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரிக்கி பாண்டிங் ஹாரி புரூக்கை உலகத்தின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். மேலும் சொந்த மண்ணில் இல்லாமல் வெளிநாட்டு மண்ணில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பாண்டிங் விரிவாக கூறும்போது “ஹாரி கப்ரூக் தற்போது உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்டராக விளங்கலாம். அவர் சில விஷயங்களை மிக அற்புதமாக செய்கிறார். அதில் பெரும்பாலானவற்றை சொந்த மண்ணில் இல்லாமல் வெளியே செய்து வருகிறார். அவர் அடித்த எட்டு முதல் ஒன்பது சதங்களில் ஏழு சதங்கள் வெளிநாட்டு மண்ணில் அடித்தவைகள்தான். மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இன்னும் சிறப்பாக விளையாடுவதை காண நான் ஆர்வமாக இருக்கிறேன்.

இதையும் படிங்க:உறுதியா சொல்றேன்.. பும்ராவிற்கு பிறகு இவர்தான்.. சிறந்த டி20 பந்து வீச்சாளர் – தினேஷ் கார்த்திக் கணிப்பு

நான் அவரை கடந்த ஐபிஎல் ஏலத்தில் எடுத்தேன். ஏன் என்றால் அவர் எதிர்கால தலைமுறை வீரராக இருக்கிறார். இப்போது அவரது சிறந்த ஆட்டம் டெஸ்ட் மட்டத்திலிருந்து வெளிப்பட்டு வருகிறது என்று நினைக்கிறேன். மேலும் டெஸ்டில் மட்டுமல்லாமல் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் சிறப்பாக விளையாடுவார் என்று தோன்றுகிறது” என ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் இதில் ஹாரி ப்ரூக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -
Published by