இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ரோகித் ஷர்மா தலைமையில் வெற்றி பெற்று சிறப்பான சாதனை படைத்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துக்கள் பேசியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்
இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடருக்கு நான்கு சுழற்பந்து வீச்சு விருப்பங்களோடு களம் இறங்கியது. அதாவது இரண்டு முதன்மை சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு பேட்டிங் ஆல் ரவுண்டர்கள் என நான்கு பேருடன் களம் இறங்கி அதில் வெற்றியும் கண்டது. அக்சார் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் களம் இறங்கி பேட்டிங் நீளத்தையும் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் என்று தரமான சுழற் பந்துவீச்சாளர்களுடன் எதிரணிக்கு நெருக்கடிகளை கொடுத்தது.
விராட் கோலி, ரோஹித் சர்மா, வருண் சக்கரவர்த்தி என பல்வேறு வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் அக்சார் பட்டேலுக்கு தேவையான பாராட்டுகளை கொடுக்க வேண்டும் என்று சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். மேலும் அவரது பந்துவீச்சு முக்கியமான போட்டிகளில் அபாரமாக இருந்ததாக சில விஷயங்கள் கூறியிருக்கிறார்.
வெளியே தெரியாத ஹீரோ இவர்தான்
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறும்போது “இந்தப் போட்டிக்கு நிறைய பாராட்டுக்கள் தேவை என்று நான் நினைக்கும் மற்றொரு வீரராக அக்சார் பட்டேல் இருக்கிறார். அவருடைய பந்து வீச்சு எப்போதும் பார்த்தது போல சீராகவும், அதே நேரத்தில் திடமாகவும் இருந்தது. இந்திய அணியில் ஏராளமான ஆல் ரவுண்டர் வீரர்கள் இருந்ததால் அவர்கள் மிகவும் சம நிலையான அணியாக இருந்தனர்.
இதையும் படிங்க:பாஸ்பால் ஒரு கட்டுக்கதை.. எங்ககிட்ட எல்லாம் அவங்க திட்டம் பலிக்காது – ஆஸி டேவிட் வார்னர் பேட்டி
ஹர்திக் பாண்டியா, அக்சார் பட்டேல் என்று இருக்கும்போது இடது கை விருப்பத்திற்காக அவர்கள் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டனர். மேலும் ஜடேஜாவும் இருந்ததால் தேவைக்கேற்றவாறு அவர்கள் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டார்கள். நீங்கள் சொல்லக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் அவர்களது வேகப்பந்து வீச்சு சற்று சிக்கலாக இருந்தது போல் தோன்றி இருக்கலாம். ஆனால் தொடரின் முடிவில் அது அவர்களுக்கு தேவையே இல்லை என்பது போல் இருந்தது” என்று ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார். இந்திய அணி இறுதிப் போட்டியில் முகமது சமி மற்றும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்று இரு வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்து விளையாடியது.






