2022 டி20 உலகக் கோப்பை பைனலில் இந்திய அணியை வீழ்த்தி இந்த அணி கோப்பை வெல்லும் – அடித்துக் கூறும் ரிக்கி பாண்டிங்

0
988
T20 Worldcup 2022

நவீன கிரிக்கெட் வடிவமான டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு 2007ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை தொடரை ஐசிசி நடத்தி வருகிறது. 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை எம்எஸ்.தோனியின் இளம் இந்தியப் படை வென்று அசத்தியது!

இதுவரை 2007 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை மொத்தம் ஏழு டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் அதிகப்பட்சமாக வெஸ்ட் இன்டீஸ் இரண்டுமுறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இன்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா என ஆறு அணிகள் டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளன!

- Advertisement -

கடைசி உலகக்கோப்பை போட்டி சென்ற ஆண்டு யுஏஇ-யில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா முதல் சுற்றோடு வெளியேற, ஆஸ்திரேலியா-பாகிஸ்தான், நியூசிலாந்து-இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி மோதின, இதில் பாகிஸ்தானை வென்று ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தை வென்று நியூசிலாந்தும், இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்று மோதின. இதில் ஆஸ்திரேலியா வென்று சாம்பியன் ஆனது!

இந்தத் தொடர் கொரோனா காரணமாக தாமதமாக நடத்தப்பட்டது. எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 13 ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்காகத் தகுதிசுற்று போட்டிகள் நடத்தப்பட்டு, தொடர் தயாராக இருக்கிறது!

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் எந்த அணிகள் மிகப் பலமாய் இருக்கின்றன. எந்த இரு அணிகள் இறுதிபோட்டிக்குச் செல்லும், அதில் எந்த அணி வென்று எட்டாவது டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றுமென லெஜன்ட் பேட்ஸ்மேனும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் தனது கருத்தில் “பிரன்டன் மெக்கல்லமின் பயிற்சியில், நியூசிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் அபாரமாய் வென்றிருந்தது. அதேபோல் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் மேத்யூ போட் பயிற்சியிலும் மிகச்சிறப்பான மேட்ச் வின்னர் வீரர்களைக் கொண்டிருக்கிறது” என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “கடந்த முறை யு.ஏ.இ-ல் நடந்த உலகக்கோப்பைக்கு முன்னதாக அங்கு நடந்த ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியா வீரர்கள் விளையாடியது, உலகக்கோப்பையை வெல்ல உதவியது. இப்போது சொந்த நாட்டில் விளையாடுவது நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவிற்கு சாதகமான விசயம். பேப்பர் அளவில் எடுத்துக்கொண்டால் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அதிக மேட்ச் வின்னர்களை வைத்திருக்கிறது. என்னைக் கேட்டால் இந்தியா ஆஸ்திரேலியா இறுதிபோட்டிக்குத் தகுதிபெறும். இதில் ஆஸ்திரேலியா வெல்லும் எனக் கூறுவேன்” என்று தெரிவித்திருக்கிறார்!