இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு எச்சரிக்கை தந்த பாண்டிங்.. சொந்த மண்ணில் இந்தியா ஜெயிக்கணும்னா இதை செஞ்சே ஆகணும்

இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி விளையாடுவது எப்போதுமே கடினமான சவாலாக இருக்கும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இருப்பினும், சமீப ஆண்டுகளில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் இந்தியாவுக்கு வந்து வெற்றி பெற்றிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

அதே நேரத்தில், சொந்த மண்ணில் இந்தியா அதிக வெற்றிகளைப் பெற வேண்டுமென்றால் ஆடுகளங்களைத் தயாரிக்கும் விதத்தில் மாற்றம் தேவை என பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். அதிகமாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை உருவாக்குவதால், எதிரணியை விட இந்திய பேட்ஸ்மேன்களே தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறும் போது
“இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் எப்போதுமே கடினமானது. ஆனால் சமீப ஆண்டுகளில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளன. அதிலிருந்து ஆஸ்திரேலியா நம்பிக்கை பெறலாம். இந்தியா சொந்த மண்ணில் அதிக போட்டிகளில் வெல்ல விரும்பினால், ஆடுகளங்களைத் தயாரிக்கும் விதத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். சுழற்பந்துவீச்சுக்கு அதிகமாக சாதகமான ஆடுகளங்களை உருவாக்குவதில் அவர்கள் எல்லை மீறிவிட்டதாக நினைக்கிறேன். அதனால் இந்திய பேட்ஸ்மேன்களாலேயே சமாளிக்க முடியவில்லை; எதிரணிகள் இந்தியாவில் முன்பைவிட சிறப்பாக விளையாடி வருகின்றன,” என்று பாண்டிங் கூறினார்.

- Advertisement -
Published by