இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் பும்ராவின் பந்துவீச்சில் அதிக முறை ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் அவரது பந்து வீச்சில் மட்டும் அதிக முறை ஆட்டம் இழப்பது ஏன் என்பது குறித்து ஸ்மித்திடம் கேட்டதற்கு அதற்கான காரணத்தை கூறி இருப்பதாக ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
பெரும் சவாலாக விளங்கிய பும்ரா
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 32 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தார். ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக பும்ரா வெளியேறா விட்டால் இந்திய அணி தொடரை இழக்காமல் 2-2 என்ற கணக்கில் நிச்சயமாக சமன் செய்திருக்க முடியும். பும்ரா வராதது தங்களுக்கு பெரிய நம்பிக்கை அளித்ததாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் ஆஸ்திரேலியா தொடக்க வீரர் கவாஜா வெளிப்படையாகவே பேசி இருந்தார்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் ஆன ஸ்டீவ் ஸ்மித் பும்ராவின் பந்துவீச்சில் அதிக முறை ஆட்டம் இழந்தார். பேட்டிங்கில் அதிக நுணுக்கம் தெரிந்த ஸ்மித் எந்த வகையான பந்துவீச்சாக இருந்தாலும் சிரமமின்றி எதிர்கொள்ளும் நிலையில் பும்ராவின் பந்துவீச்சில் மட்டும் அதிக முறை ஆட்டம் இழந்தது ஏன் என்பது குறித்து ரிக்கி பாண்டிங் அவரிடம் விவாதித்த போது அதற்கான காரணத்தை ஸ்மித் கூறியிருக்கிறார்.
அவரை புரிந்து கொள்வது கடினம்
இது குறித்து ரிக்கி பாண்டிங் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியா அணிக்கு இது ஏன் மிகக் கடினமாக இருக்கிறது என்பது பற்றி பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நான் பும்ராவை நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். 17 வயதில் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் போது நான் அந்த அணியின் கேப்டனாக இருந்தேன். வேகப்பந்து வீச்சாளர்களை அவுட் ஆக்குவதில் ஸ்மித்துக்கு நல்ல பழக்கம் இருப்பதாக நான் கூறியிருந்தேன். இதில் பும்ராவின் காட்சி குறிப்புகளை புரிந்து கொள்வதற்கு பெரும்பாலான பந்துவீச்சை காட்டிலும் இது சற்று கடினமாக இருப்பதாக கூறியிருந்தார்.
இதையும் படிங்க:உண்மைய சொல்றேன்.. என் டீம்ல கோலி இருந்தா.. அவருக்கு நிச்சயம் இதை செய்திருப்பேன் – ஆஸி மைக்கேல் கிளார்க்
அவரது பந்துவீச்சை புரிந்து கொள்ள குறைந்தது ஐந்து முதல் ஆறு பந்துகள் தேவைப்படும். சில நேரங்களில் நீங்கள் அதற்குள் அவுட் கூட ஆகிவிடலாம். நீங்கள் பும்ராவை ஒரு சவாலான ஆடுகளத்தில் எதிர்கொள்ளும் போது அந்தக் கட்டத்தில் விஷயங்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால் உங்கள் ஆட்டம் விரைவாக முடிந்துவிடும்” என்று ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியா தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பெருமையும் இந்திய பந்துவீச்சாளர் பும்ராவையே சார்ந்து இருக்கிறது.






