பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான ரவி சாஸ்திரி மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் சாம்பியன் டிராபி இறுதிப் போட்டிக்கு வரும் அணிகள் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் டிராபி தொடரை கைப்பற்றிய நிலையில் தற்போது தங்களது சொந்த மண்ணில் சாம்பியன் டிராபி தொடரை நடத்த உள்ளது. இந்தத் தொடரிலும் தற்போது பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் வலுவாக இருக்கின்றன. கடந்த முறை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறாத நிலையில் இந்த முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்.
ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றி இருந்தது நினைவிருக்கலாம். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி மற்றும் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் இந்தத் தொடரில் இறுதிப் போட்டிக்கு வரும் அணிகளை கணித்திருக்கிறார்கள். அரையிறுதிக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் வரும் என்று கணித்து இறுதிப் போட்டிக்கு குறிப்பாக இரண்டு அணிகளை கணித்திருக்கிறார்கள்.
பைனலுக்கு செல்லும் இரண்டு அணிகள்
இது குறித்து இருவரும் கூறும் பொழுது ” மீண்டும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை கடந்து செல்வது கடினம். இரு நாடுகளிலும் உள்ள வீரர்களின் தரத்தைப் பற்றி இப்போது யோசித்துப் பாருங்கள். சமீபத்திய வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்த்தால் இந்தப் பெரிய இறுதிப்போட்டி மற்றும் ஐசிசி நிகழ்வுகள் வந்துவிட்டன. அங்கே எப்படியும் தவிர்க்க முடியாமல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என்கிற இரண்டு அணிகளும் கட்டாயம் இருக்கும்” என்று கூறி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க:3-1 என இந்திய தொடரை ஜெயிச்சதும்.. எங்களுக்கு இந்த சோகமான விஷயம் நடந்தது – ஆஸி தொடக்க வீரர் பேட்டி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னேற்றம் குறித்து இறக்கி பாண்டிங் கூறும் பொழுது ” தற்போது மிகச் சிறப்பாக பாகிஸ்தான் அணி தங்களது கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. சமீப காலமாகவே அவர்களது ஒரு நாள் கிரிக்கெட் மிகவும் சிறப்பாக இருக்கிறது. பெரிய போட்டிகள் என்று வரும்போது அவர்கள் எப்போதுமே கணிக்க முடியாத அணியாக இருப்பார்கள் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் தற்போது அவர்கள் விஷயங்களை சற்று சரி செய்து விட்டார்கள் என்று தோன்றுகிறது” என கூறி இருக்கிறார்.






