உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவின் இடத்தை தீர்மானிக்கப் போவது இந்தியா தான் – ரிக்கி பாண்டிங்

0
125
Ricky ponting

டெஸ்ட் போட்டிகளை விறுவிறுப்பாக்கி இரசிகர்களை ஈர்க்க ஆடுகளங்கள் முடிவு காணும் வகையில் அமைக்கப்படுகின்றன. முடிவை நோக்கி ஆடுமாறு டெஸ்ட் கிரிக்கெட் நாடுகளை ஐசிசியும் கேட்டுக்கொண்டிருந்தது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியும் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுக்காலத்தில் எந்த இரு அணிகள் அதிக வெற்றி சதவிகிதத்தை வைத்திருக்கிறதோ, அந்த அணிகள் இறுதிபோட்டியில் மோதி, அதில் வெல்லும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும். கடந்த 2019-21 ஆண்டுக்கான முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் ஆனது!

இதையடுத்து தற்போது 2021-23 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தொடர் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. தற்போதைய நிலையில் செளத்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் என ஐந்து அணிகள் வரிசைபடி இருக்கின்றன!

- Advertisement -

இதில் ஆஸ்திரேலியா அணி இந்த ஆண்டு இறுதிக்குள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வருகிறது. இதற்கு முன்னால் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட பங்களாதேஷ் இந்தியா வருகிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவோடு மோதிவிட்டு, உள்நாட்டில் செளத்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இன்டீஸ் அணிகளோடு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது!

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிபோட்டியில் மோதும் அணி எதுவென்று எதிர்பார்ப்பு இரசிகர்களிடையேயும் அதிகரித்து இருக்கிறது. இதுகுறித்துத் தற்போது ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார். அதில் அவர் “ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணம்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டிக்கான முக்கியச் சுற்றுப்பயணமாக அமையுமென்று கருதுகிறேன். இந்தியாவிற்கும் இதே நிலைதான். ஆஸ்திரேலியாவோ இந்தியாவோ இந்த இருநாடுகள் விளையாடும் கிரிக்கெட் தொடர் அதிகம் பரபரப்பாகப் பேசப்பட்டு, இருநாடுகளுக்கு இடையே போட்டி அதிகரித்துக்கொண்டே வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய ரிக்கி பாண்டிங் “லபுசேன், ஸ்மித் இருவருமே ஆஸ்திரேலியாவில் சிறப்பான சாதனைகளைப் படைத்திருக்கிறார். கடந்த வாரத்தைத் திரும்பிப் பார்க்கும்போது லபுசேன் இலங்கை உடன் அடித்த சதம்தான் அவர் வெளியில் அடித்த முதல் சதம் என்று நினைக்கிறேன். ஸ்மித் கடந்த இரண்டு வருடங்களாக ஆஸ்திரேலியாவில் சிரமப்பட்டுள்ளார்” என்றும் தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -