“இந்திய கிரிக்கெட்டில் ரிட்டையர்ட் ஆகி.. இந்தியாவுக்கு எதிரா விளையாட போறேன்” உன்முக்த் சந்த் பேட்டி

0
827
Chand

இளம் வயதில் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் ஜொலித்து பலரது கவனத்தையும் ஈர்த்த சில வீரர்கள், அதற்குப் பிறகு அப்படியே காணாமல் போய் இருக்கிறார்கள்.

இதில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் உடன் இணைந்து மிகச் சிறப்பாக விளையாடிய வினோத் காம்ளி, பிறகு இந்திய அணிக்கு வாய்ப்பு பெற்று டெஸ்டில் குறுகிய காலத்தில் இரண்டு இரட்டை சாதங்கள் அடித்தவராக இருந்து, ஆனால் அதற்குப் பிறகு சுத்தமாக இந்திய கிரிக்கெட்டை விட்டு ஓரம் கட்டப்படும் அளவுக்கு ஆளானார்.

- Advertisement -

மேலும் இந்த வரிசையில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வாசிம் ஜாஃபர் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியவில்லை. மேலும் அமோல் மஜும்தார் உள்நாட்டு கிரிக்கெட்டில் டன் கணக்கில் ரன்கள் குவித்த போதும், இந்திய அணிக்கு பேட்ஸ்மேன்கள் தேவைப்பட்ட காலகட்டத்தில் கூட அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த வகையில் 2012 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து அந்த உலகக் கோப்பையை ஜெயித்தவர் உன்முக்த் சந்த்.

இவரை அடுத்த விராட் கோலி என்று இந்திய கிரிக்கெட்டில் பலரும் எதிர்பார்த்து இருந்த பொழுது, ஐபிஎல் தொடருக்கு வந்து அத்துடன் அங்கு ஜொலிக்க முடியாமல் இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

- Advertisement -

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த இவர், மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி அந்த நாட்டு அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் 3 ஆண்டுகளில் வருடம் பத்து மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்தால் மட்டுமே விளையாட முடியும் என்கின்ற விதிக்கும் கட்டுப்பட்டு நடந்திருக்கிறார். இதன் காரணமாக இவர் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார் உன்முக்த் சந்த்.

இந்த வகையில் இவர் தற்பொழுது இந்திய அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்காக விளையாட இருக்கிறார். இதுகுறித்து இவர் கூறும் பொழுது “இது மிகவும் வித்தியாசமான ஒன்றாக இருக்கும். நான் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அமெரிக்க அணிக்காக இந்திய அணியை எதிர்த்து விளையாடுவதே நோக்கமாக இருந்தது. இதில் தப்பான எது ஒன்றும் கிடையாது. சிறந்த அணிக்கு எதிராக என்னை நிரூபிக்க வேண்டும் என்பதுதான் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.