இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் உடன் இந்திய நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு சுமுகமாக உறவு இல்லாதது, இந்திய கிரிக்கெட் வாரியத்தை வருத்தப்பட வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு கம்பீர் வந்ததில் இருந்து மூத்த வீரர்கள் வெளியேறுவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் கம்பீர் உடன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பேச்சுவார்த்தையை குறைத்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது.
தற்போது விராட் கோலி உடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கருக்கு ஓரளவுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆனால் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இருந்து ரோஹித் சர்மா அவருடன் எந்தவித தொடர்பையும் வைத்துக் கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. இது நிலைமையை மேலும் சிக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் நேற்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி என்பது பயிற்சியாளர் கம்பீர் உடன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் பெரிய அளவிலான பேச்சுவார்த்தை எதையும் செய்யவில்லை. இத்துடன் இருவரையும் தொடர்ந்து விளையாட வைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்ற செய்திகள் அவர்களை வருத்தம் அடைய வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியான செய்தியில் “கம்பீர் மற்றும் மூத்த வீரர்கள் விராட் கோலி ரோஹித் சர்மா இருவருக்கும் இருக்க வேண்டிய அளவுக்கு சுமுகமான உறவு இல்லை என்று தெரிகிறது. மேலும் இந்த இரு வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து, இரண்டாவது அல்லது மூன்றாவது ஒருநாள் போட்டி முடிவடைந்ததும் ராய்ப்பூர் அல்லது அகமதாபாத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறலாம்”
இதையும் படிங்க : ஹர்ஷித் ராணா நாங்க ரொம்ப நாளா தேடின வீரர்.. அவர் சிறப்பு வாய்ந்தவர்னு தெரியும் .. காரணம் இதுதான் – கேஎல் ராகுல் பேட்டி
“ஆஸ்திரேலிய தொடரின் போது இருந்து ரோஹித் சர்மா மற்றும் அகர்கர் இடையே எந்த தொடர்பும் இல்லை. அப்போது இருந்து இப்போது வரையில் கம்பீர் உடன் விராட் கோலியும் பெரிய அளவில் பேசவில்லை. மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கம்பீர் மற்றும் அகர்கரை தாக்கி வருவது, இந்திய கிரிக்கெட் வாரியத்தை வருத்தம் அடைய வைத்திருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.