இந்திய கிரிக்கெட்

விராட் ரோகித்துக்கு சம்பளம் குறைப்பு.. கில்லுக்கு சம்பளம் உயர்வு.. ஏன் இந்த மாற்றம்? – வெளியான செய்திகள்

பிசிசிஐ சம்பள ஒப்பந்தத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் குறைப்பு செய்யப்படலாம் என செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் இளம் வீரர் கில்லுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பிசிசிஐ சம்பள பட்டியலில் ஏ+ பிரிவில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பிரிவிலிருந்து ஏ பிரிவுக்கு இவர்களை கீழே இறக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக செய்திகள் கூறுகிறது.

என்ன பிரிவுக்கு எவ்வளவு சம்பளம்?

இந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உச்சக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தின் போது டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் சம்பள ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும் என வெளிப்படையாக செய்திகள் தெரிவிக்கிறது.

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் நான்கு பிரிவுகளில் வீரர்களுக்கு சம்பளம் வழங்கி வருகிறது. ஏ+ 7 கோடி, ஏ 5 கோடி, பி 3 கோடி, சி 1 கோடி என நான்கு பிரிவுகள் என் கீழ் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பிரிவுகளில் இருக்கும் சில வீரர்கள் மேலும் கீழுமாக மாறலாம் என கூறப்படுகிறது.

- Advertisement -

விராட் ரோகித்துக்கு சம்பளம் குறைப்பு

தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஏ+ பிரிவில் வருடத்திற்கு 7 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்கள். இவர்கள் இருவரும் இரண்டு வடிவத்தில் ஓய்வு பெற்று விட்டதால் இவர்களை ஏ பிரிவுக்கு பிசிசிஐ கொண்டு வருவதற்கு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இவர்களுக்கு 2 கோடி ரூபாய் சம்பள குறைப்பு நடக்க வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : ரோகித் பாய் எங்களை திட்டும்போது இப்படித்தான் இருக்கும்.. திட்டலைனாதான் கஷ்டமா இருக்கும் – ஜெய்ஸ்வால் பேட்டி

இந்திய ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் ஏ பிரிவில் இருக்கிறார். இவர் ஜடேஜா மற்றும் பும்ரா இருந்து வரும் ஏ+ பிரிவுக்கு கொண்டு செல்லப்படுவார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு பெறும் வரையில் அவர்களை மரியாதையுடன் நடத்தி ஏ+ பிரிவில் வைத்திருக்க வேண்டும் எனக்கூறி வருகிறார்கள்.

- Advertisement -
Published by