இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா களத்தில் வீரர்களை திட்டும் பொழுது எப்படி இருக்கும்? என்பது குறித்து இளம் வீரர் ஜெய்ஸ்வால் பேசி இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே வாய்ப்பு பெற்று வந்த ஜெய்ஸ்வாலுக்கு, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டியில் ஜெய்ஸ்வால் சதம் அடித்து தனக்கான வாய்ப்பை நியாயப்படுத்தி இருந்தார்.
இரண்டு நட்சத்திரங்களுக்கு நடுவில்
ஜெய் ஸ்வால் சதம் அடித்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரம்பத்தில் அரை சதம் அடிக்கும் வரையில் ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடி இருந்தார். அரை சதம் அடித்த பிறகு ரோகித் சர்மா ஆட்டம் இழந்ததால், விராட் கோலி உடன் இணைந்து விளையாடி சதம் அடித்தார். மேலும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து விராட் கோலி உடன் போட்டியை முடித்தார்.
இந்த போட்டி இவருக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பை பயன்படுத்தாத காரணத்தினால் அவரது பேட்டிங் தொழில்நுட்பம் வரையில் அலசப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் சதம் அடித்ததின் காரணமாக, அவர் மேல் இருந்த அழுத்தம் குறைந்தது. இதற்கு களத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் வழிகாட்டியது முக்கியமாக அமைந்தது.
ரோகித் சர்மா திட்டினால்
முதலில் ரோகித் சர்மா பற்றி பேசி உள்ள ஜெய்ஸ்வால் கூறும் பொழுது “ஒவ்வொரு தடவை ரோகித் பாய் எங்களை திட்டம் பொழுதும் அதில் நிறைய அன்பும் பாசமும் கலந்து இருக்கும். உண்மையைச் சொன்னால் உங்களை ரோகித் பாய் திட்டவே இல்லை என்றால்தான் உங்களுக்கு ஏதாவது பதட்டமாக இருக்கும். ‘என்ன ஆச்சு? அவர் ஏன் திட்டவில்லை? நாம் ஏதாவது தவறாக செய்ததை அவர் மனதில் வைத்துக் கொண்டாரா?’ என்று தோன்றும்”
இதையும் படிங்க : நானும் விராட்டும் சேர்ந்து பல வெற்றி தோல்வியை பார்த்து விட்டோம்.. அந்த வார்த்தையை சொல்ல விரும்பல – ரோகித் சர்மா பேட்டி
” அவர்கள் இருவரும் அணியில் இருந்தால் நாம் நிம்மதியாக உணர்வோம். நான் முதல் இரண்டு போட்டிகளில் ரன் எடுக்காமல் மூன்றாவது போட்டிக்கு வந்தேன். இதனால் ரோகித் பாய் முதலில் தான் ரிஸ்க் எடுத்து விளையாடுவதாகவும், என்னை பொறுமையாக இருக்கும் படியும் சொன்னார். இப்படி எத்தனை பேர் உதவி செய்வார்கள்? அதேபோல விராட் பாஜி எனக்கு சில சின்ன இலக்குகளை கொடுத்தார். மேலும் கடைசி வரையில் நின்று போட்டியை முடிக்கும்படி சொன்னார்” என்று கூறியிருக்கிறார்.






