இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கின்ற காரணத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் தனிமைப்படுத்தப்படுவதுடன், அதன் உள்நாட்டு கிரிக்கெட்டும் பெரிய அளவில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே தற்பொழுது பதட்டம் அதிகரித்திருக்கும் காரணத்தினால், இனி இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் நேரடியாக மோதுவதற்கான வாய்ப்புகள் கூட குறைக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.
பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் அணிந்த விதம்
கடந்த சில வருடங்களாக பல முன்னணி பெரிய கிரிக்கெட் நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் வந்து விளையாடுவதை நிறுத்தி இருந்தன. மேலும் பெரிய வருமானத்தை கொடுக்கக்கூடிய இந்திய அணிக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு தொடர்கள் கிடைக்கவில்லை. இதன் காரணத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய அளவில் வருமான இழப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் உள்நாட்டு கிரிக்கெட் வளர்ச்சிக்கு பெரிய அளவில் பணத்தை செலவிட முடியவில்லை. இதன் காரணத்தால் அவர்களால் தரமான வீரர்களை தொடர்ந்து உருவாக்கவும் முடியவில்லை. இது பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட்டை பெரிய அளவில் பாதித்தது. தற்போதுதான் பெரிய அணிகள் பாகிஸ்தான் வந்து விளையாட ஆரம்பித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ வைத்த செக்
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இருந்து விலகிக் கொள்ள இருப்பதாக பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதனால் பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கலாம். ஆனால் இந்தியா விலகியதால் பெரிய வருவாய் எதுவும் கிடைக்காது.
இதையும் படிங்க : கேப்டன்சியில் தோனியும் கில்லும் ஒரே மாதிரிதான்.. நாம இத செஞ்சா மட்டும் போதும் – குஜராத் துணை கோச் பேட்டி
மேலும் மிக முக்கியமாக தற்பொழுது ஆசிய க் கிரிக்கெட் கவுன்சில் சேர்மேனாக பாகிஸ்தான் கிரிக்கெட் சேர்மேன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணி ஆசியக் கோப்பையில் பங்கேற்காவிட்டால் பாகிஸ்தானுக்கு மீண்டும் பெரிய வருவாய் இழப்பு ஏற்படும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் பெரிய அளவில் பாதிக்கப்படும். மேலும் பெரிய நாடுகள் பாகிஸ்தான் தொடர்ந்து வருமா என்றும் தெரியவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட்டை தனிமைப்படுத்தும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் அழிவை சந்திக்கலாம்!






