2025 சாம்பியன் டிராபி தொடர் மொத்தமாக துபாய்க்கு வருகிறதா? ஐசிசி விதித்துள்ள கெடு.. வெளியான தகவல்கள்

0
32
ICC

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மொத்தம் நான்கு மைதானங்களில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்த மைதானங்களில் ஏற்பாடுகள் குறித்து ஐசிசி மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை சேர்ந்த சில ஊடகங்களில் பாகிஸ்தானில் போட்டி நடைபெறும் மூன்று மைதானங்களில் சீரமைப்பு பணிகள் தாமதமாக நடைபெறுவதாகவும், இதன் காரணமாக ஒட்டு மொத்தமாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் துபாய்க்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்து வந்தன.

- Advertisement -

உண்மை நிலவரம் என்ன?

பாகிஸ்தானில் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி என மூன்று மைதானங்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டிகள் நடைபெறுகிறது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 17 பில்லியன் பணத்தை மைதானங்களை சீரமைப்பதற்காக செலவிடுகிறது. இந்த நிலையில் இந்த மைதானங்கள் குறித்த இரண்டு வாரத்திற்குள் தயாராகாத நிலை காணப்படுவதாக செய்திகள் கூறின. இது தொடர்ந்தால் போட்டிகள் துபாய்க்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அப்படி எதுவும் சூழ்நிலை இல்லை எனவும், மைதானங்கள் மிக வேகமாக தயாராகி வருவதாகவும், மேலும் இந்த மூன்று மைதானங்களில் ஆடுகளம் சம்பந்தப்பட்ட மைதான நிர்வாகத்திடம் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அதில் ஐசிசி ஆடுகள கண்காணிப்பாளர் தலையிட்டுக் கொள்ளலாம் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஐசிசி உன்னிப்பாக கவனிப்பு

மேலும் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் மைதானங்கள் மறுசீரமைப்பு எவ்வளவு வேகமாக நடந்து வருகிறது என்பது குறித்து ஐசிசி மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்த வாரத்திலும் அதற்கு அடுத்த வாரத்திலும் இரண்டு முறை பணிகள் எந்த அளவிற்கு இருக்கின்றன என்று ஐசிசி பார்வையிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் திருப்தி இல்லாவிட்டால் மாற்றம் நடக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : நான் கேப்டனா இருந்தா கோலிக்காக போராடுவேன்.. சச்சின் மாதிரி ஆட தேவையில்ல – மைக்கேல் கிளார்க் பேச்சு

மேலும் இந்திய அணிக்கு துபாயில் வைத்து சாம்பியன்ஸ் டிராபிக்காக துபாயில் ஒரு பயிற்சி போட்டி நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது என செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -