இந்திய கிரிக்கெட்

ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் பதவி.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்.. பிசிசிஐ எடுத்த புதிய முடிவு – வெளியான தகவல்கள்

இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யாத நிலையில் அதற்கு பதிலாக அவரை ஒருநாள் கிரிக்கெட் வடிவ இந்திய அணிக்கு கேப்டனாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -

தற்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் சுப்மன் கில் துணை கேப்டன் ஆகவும் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் ரோஹித் சர்மா விரைவில் ஓய்வு பெற இருப்பதாகவும் அதனால் ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக கொண்டுவர முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

காரணம் என்ன?

தற்போது இந்திய அணி உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய வணிக வெற்றி பெற்ற அணியாக இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதனால் மூன்று வடிவ இந்திய அணிக்கும் ஒருவரே கேப்டனாக இருப்பது கடினமான விஷயமாக மாறுகிறது.

இதன் காரணமாக அதிகப் போட்டிகள் நடைபெறும் டெஸ்ட் மற்றும் டி20 இந்திய அணிக்கு கில்லை தொடர்ந்து கேப்டனாக செயல்பட வைத்து, குறைந்த போட்டிகள் நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கிறது. இதன் மூலம் கில்லுக்கு நடுவில் தேவைப்படும் ஓய்வு கிடைக்கும்.

- Advertisement -

ஒரே ஒரு கண்டிஷன்

அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய ஒரு நாள் அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்படுவதற்கு ஒரே ஒரு கண்டிஷன் இருக்கிறது. தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா தன்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் பற்றி என்ன மாதிரியான முடிவை எடுத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அகர்கர் பேசுறது ரொம்ப தப்பு.. ஒரு தெளிவான மனுஷனை குழப்பி விட்டுட்டீங்க – முன்னாள் தேர்வு குழு தலைவர் ஆதங்கம்

மேலும் பிசிசிஐ ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறுமாறு வற்புறுத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. அவரும் ஓய்வு பெற தயாராகி விட்டார் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் விராட் கோலி தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிகிறது.

- Advertisement -
Published by