இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து டெஸ்ட்.. வாய்ப்பை இழக்கும் இந்திய வீரர்.. ரெடியான பேட்டிங் யூனிட் பட்டியல்.. வெளியாகும் புதிய செய்திகள்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்தியா பேட்டிங் யூனிட் தயாராகி விட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதில் ஒரு இளம் இந்திய வீரர் வாய்ப்பை இழக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த மாதம் ஜூன் இருபதாம் தேதி இந்தியா இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. இது நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் முதல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து ஏ டெஸ்ட்

இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஏ அணி விளையாடுகிறது. இதில் கருண் நாயர் முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்து தன்னுடைய இடத்தை இந்திய பிளேயிங் லெவன்த் உறுதி செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் ஜெய்ஸ்வால் மூன்று இன்னிங்ஸில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து இருந்தாலும் கூட துவக்க வீரர்க்கான இடத்தில் அவரும் விளையாடுவது உறுதி. மேலும் இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடித்து விட்டதால் அவரும் துவக்க வீரருக்கான இடத்தை உறுதி செய்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வாய்ப்பை இழக்கும் வீரர்

இந்த நிலையில் இந்திய ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் மொத்தம் மூன்று இன்னிங்ஸில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். சில இந்திய முன்னாள் வீரர்கள் சாய் சுதர்சனுக்கு முன்பாக அபிமன்யு ஈஸ்வரனுக்கு பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தை கொடுக்க வேண்டும் என்று கூறி வந்தார்கள். தற்பொழுது அபிமன்யு ஈஸ்வரன் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு ஏறக்குறைய இழந்து விட்டார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கோலி கிட்ட பேசி.. முக்கியமான அந்த ஒரு விஷயத்தை கத்துக்கிட்டு இருக்கேன்.. ஹெல்ப் பண்ணும் – சாய் சுதர்சன் பேட்டி

அதே சமயத்தில் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் தற்போது நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் சாய் சுதர்சனுக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதைத்தொடர்ந்து கேஎல்ராகுல், ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், கில், கருண் நாயர் மற்றும் ரிஷப் பண்ட் என இந்திய பேட்டிங் யூனிட் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -
Published by