இந்திய கிரிக்கெட்டில் மிகவும் மதிக்கப்படும் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் மீண்டும் இந்திய கிரிக்கெட் பக்கம் திரும்ப இருப்பதாக செய்திகள் தற்போது தெரிவிக்கிறது.
ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக விளையாடிய காலகட்டங்களிலும், ஓய்வுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லவும் பல விதங்களில் பல பங்களிப்புகளை கொடுத்தவராக இருக்கிறார். மேலும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து டி20 உலகக் கோப்பை தொடரையும் வென்றெடுக்கிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு வீரர்களை தக்க வைப்பதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிர்கால கேப்டனாக ரியான் பராக்கை கொண்டு வருவதற்கு உள்ளுக்குள் முயற்சிகள் நடந்ததும், இதனால் கேப்டன் சஞ்சு சாம்சன் வெளியேற முடிவு செய்ததும், ராகுல் டிராவிட்டை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. இதன் காரணமாக அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து திடீரென விலகிக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பொறுப்பேற்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வருவதற்கு முன்பாக என்சிஏ தலைவராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய இந்திய இளம் நட்சத்திரங்களை உருவாக்கியதில் பெரிய பங்கை வகித்திருக்கிறார்.
இதையும் படிங்க : நியூசி டி20.. ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு.. 2026 wcக்கு பக்கா ஸ்கெட்ச்.. மாஸ் பரிசோதனை முயற்சி
தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வரும் விவிஎஸ் லக்ஷ்மன் ஐபிஎல் தொடருக்கு பயிற்சியாளர் பொறுப்புக்கு வர விரும்புவதாகவும், அதற்கான ஆஃபர்கள் அவருக்கு வந்துள்ளதாகவும், இதன் காரணமாக ராகுல் டிராவிட் அந்த பொறுப்புக்கு வர இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.