அடுத்த மாதம் ஆசிய கோப்பை தொடங்க இருக்கும் நிலையில் இந்திய டி20 அணிக்கு இரண்டு கவலை அளிக்கும் விஷயங்கள் தேசிய கிரிக்கெட் அகாடமிடம் இருந்து வந்திருக்கிறது.
இந்திய அணி நீண்ட இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பின்பு அடுத்து ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்டில் டி20 வடிவத்தில் துவங்கும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
குடலிறக்க அறுவை சிகிச்சை
இந்திய சி20 அடி கேம் கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு குடல் இறக்க பிரச்சனை தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் காரணமாக ஜூன் மாதம் ஜெர்மன் முனிச் நகரில் சூரியகுமார் யாதவ் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி கண்காணிப்பில் இருந்து வந்தார்.
தற்போது இந்த கண்காணிப்பு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. காரணம் சூரியகுமார் யாதவ் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர் தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்தும் செய்திகள் வெளியாகவில்லை. ஆசியக் கோப்பை அருகில் இருக்கும் நிலையில் சூரிய குமாரின் உடல் தகுதி விஷயம் கவலை அளிப்பதாக இருக்கிறது.
மேலும் ஒரு பின்னடைவு
இத்துடன் இந்திய அணிக்கு மிக முக்கிய வீரரான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய பெயரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் அவரும் தனது உடல் தகுதியை அங்கு மதிப்பீடு செய்ய இருக்கிறார். இதற்குப் பிறகு அவருடைய நிலை என்னவென்று தெரியவரும்.
இதையும் படிங்க : 177 ரன்.. 71 இன்னிங்சாக தொடரும் பாபரின் சோகம்.. வெஸ்ட் இண்டீஸ் ரிவெஞ்ச்.. பாகிஸ்தான் அணி தோல்வி
மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த 27 மற்றும் 29ஆம் தேதி வரையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து தனது உடல் தகுதியை நிரூபித்து விட்டார். அதே சமயத்தில் அதற்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு தரப்படுமா? என்பது சந்தேகமே. இருந்த போதும் சில காலமாக டி20 வடிவத்தில் சிறப்பாக விளையாடும் அவர் உடல் தகுதியுடன் இருப்பது நம்பிக்கை அளிக்கிறது!






