இன்று இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கிறது. இந்தத் தொடருக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் வருகிறார்கள். இந்த நிலையில் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
கம்பீர் இதுவரையில் இளம் வீரர்கள் கொண்ட அல்லது சர்வதேச கிரிக்கெட் இல்லாத பிரான்சிஸைஸ் கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியாளராக கூட இல்லாமல் வழிகாட்டியாக மட்டுமே இருந்து வந்திருக்கிறார். அதே சமயத்தில் தற்போது கூட அவர் பயிற்சியாளராக இளம் வீரர்கள் கொண்ட டி20 அணிக்குதான் முதலில் இணைந்திருக்கிறார்.
இந்த நிலையில் அடுத்து சீனியர் வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு வர இருக்கிறார்கள். அவர்களுடன் கம்பீர் இணையும் பொழுது அவர்கள் இருக்கும் டிரெஸ்ஸிங் ரூமை கையாள்வது அவருக்கு மிகச் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இதை மிகவும் கவனத்துடன் கையாளுமாறு பயிற்சியாளர் கம்பீருக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
கம்பீர் விளையாடி முடித்து பல காலம் ஆகிவிட்டது. அப்போது இருந்த இந்திய ட்ரெஸ்ஸிங் ரூம் போல இப்பொழுது இருக்காது. மேலும் ஐபிஎல் அணிகளின் ட்ரெஸ்ஸிங் ரூம் போலவும் இங்கு இருக்காது. எனவே வீரர்களை அவர்களுடைய தற்கால இயல்பில் இருக்க அனுமதித்து, அவர்களுடன் இணைந்து வேலை செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதைத்தான் ராகுல் டிராவிட் செய்திருந்தார். தற்போது ராகுல் டிராவிட்டை உதாரணம் காட்டி கம்பீர் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து வெளியான செய்திகள் கூறப்பட்டுள்ளதாவது “இது எளிதானது கிடையாது. இது ஐபிஎல் போல பிரான்சிசைஸ் மாடல் இல்லை. ஐபிஎல் எனும் பொழுது நீங்கள் தான் அங்கு பாஸ் எனவே நீங்கள் விதிமுறைகளை ஆணையிடலாம். ஆனால் அதை ஐபிஎல் நடைமுறை இந்திய அணியில் வேலை செய்யாது. இங்கு நீங்கள் போனை எடுக்க வேண்டும் வீரர்களுடன் தொடர்ந்து உரையாட வேண்டும்.
இதையும் படிங்க : பிசிசிஐ பாணியில்.. பெரிய பரிசுத்தொகையை அறிவித்த இலங்கை கிரிக்கெட்.. மகளிர் ஆசிய கோப்பை 2024
பழைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இதில் சிறந்தவராக இருந்தார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. எனவே அவருக்கும் ஆரம்பத்தில் வீரர்களை கையாள்வது சவாலான ஒன்றாக இருந்திருக்கும். மேலும் தற்போது ஒவ்வொரு வீரர்களும் கோடீஸ்வரர்கள். மேலும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் பெரும்பாலும் கேப்டனாக வேறு இருக்கிறார்கள்.எனவே கம்பீர் வீரர்களை கையாள்வது கடினமாக இருக்கும்” என்று கூறப்பட்டிருக்கிறது.






