கம்பீர் பிளான்.. 4 பேருக்கு கட்டுப்பாடு கிடையாது.. மற்ற 4 பேர் இதை செஞ்சே ஆகணும்.. மாறும் வியூகம்? – வெளியான தகவல்கள்

0
9
Gambhir

இந்திய டி20 அணியின் பேட்டிங் அணுகுமுறையை இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் மாற்றுவதற்கு வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இந்திய அணி நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக அதிரடியாக விளையாட முயற்சி செய்து பெரிய சரிவை சந்தித்தது. இறுதியாக சூரியகுமார் யாதவின் பொறுப்பாளர் பேட்டிங் காரணமாக தப்பித்து வென்றது.

- Advertisement -

முன்னாள் வீரர்கள் யோசனை

இந்திய முன்னாள் வீரர்களில் ஹர்பஜன் சிங் மிகவும் வெளிப்படையாகவே இந்திய டி20 அணியின் பேட்டிங் அணுகுமுறையை கொஞ்சம் நிதானமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். சூழ்நிலை கடினமாக இருக்கும் பொழுது கொஞ்சம் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் கூறி இருந்தார்.

அமெரிக்க அணிக்கு எதிரான அந்த போட்டியில் முதல் நான்கு விக்கெட்டுகள் வேகமாக விழுந்த பிறகு, அடுத்து வந்த ரிங்கு சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருமே கொஞ்சம் பொறுமையாக பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சி செய்திருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் அறிவுரை கூறியிருந்தார். கவாஸ்கர் இப்படி விளையாடினால் பெரிய அணிகளிடம் நிச்சயம் தோற்று விடுவோம் என எச்சரிக்கை செய்திருந்தால்.

- Advertisement -

கம்பீர் மாற்றிக் கொள்வாரா?

இந்த நிலையில் இந்திய டி20 அணி வழக்கம் போலவே முதல் நான்கு விக்கெட்டுகளை வைத்து அதிரடியாக விளையாடுவதற்கு முயற்சி செய்யலாம். ஒருவேளை இந்த முயற்சி தோல்வி அடைந்தால், விக்கெட்டுகள் வேகமாக விழுந்தால், அடுத்த நான்கு விக்கெட்டுகள் கொஞ்சம் சூழ்நிலைக்கு மதிப்பு கொடுத்து விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : நாங்க செஞ்சதும் பாகிஸ்தான் செய்றதும் ஒண்ணா?.. நாசர் புத்தி இருந்தா புரிஞ்சுக்க முயற்சி செய்யட்டும் – கவாஸ்கர் விமர்சனம்

இந்த புத்திசாலித்தனமான அணுகுமுறைக்கு கம்பீர் அடுத்தடுத்து மாறிக் கொள்வார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் தற்போது சிறிய நாடுகள் சிறப்பான முறையில் விளையாட ஆரம்பித்திருக்கின்றன. இத்துடன் ஐசிசி தொடர்கள் என்று வந்தால் பெரும்பாலும் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டுக்குமே சாதகம் உள்ள ஆடுகளங்கள் ஐசிசியால் அமைக்கப்படுகிறது. எனவே கம்பீர் இந்த முடிவுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று தெரிகிறது.

- Advertisement -