தற்போது பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கும் ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் விளையாடுவது தொடர்பாக, முக்கியமான நகர்வு ஒன்று நடைபெற்று இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியில் முதுகு பகுதியில் பும்ரா காயம் அடைந்தார். இதன் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறிய அவர் பிறகு பந்து வீச வரக் கிடையாது. இதைத்தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி அணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள அணியில் அவரது பெயர் இடம் பெற்று இருக்கிறது. அதே சமயத்தில் அவர் விளையாடுவாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.
5 வார ஓய்வு கட்டாயம்
இந்த நிலையில் பும்ராவுக்கு 5 வாரம் கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும் என கூறப்பட்டதால் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயத்தில் அவர் உடல் தகுதியை எட்டினால் மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
மிக முக்கியமாக சாம்பியன்ஸ் டிராபி அணியில் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டது பும்ராவுக்கு மாற்றாக என வெளிப்படையாக ரோஹித் சர்மா கூறியிருந்தார். இதன்மூலம் பும்ரா சாம்பியன் டிராபியில் உறுதியாக விளையாடுவாரா என்பது சந்தேகத்திற்கு இடமாகவே இருப்பது தெளிவானது. இதைத் தொடர்ந்து பும்ரா குறித்து சில முக்கிய செய்திகள் இன்று வெளியாகியிருக்கிறது.
என்சிஏ செல்லும் பும்ரா
இன்று பும்ரா தன் காயம் குறித்து ஸ்கேன் செய்வதற்காக பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்கிறார். மேலும் இதைத் தொடர்ந்து அங்கு அவருடைய காயம் குறித்து ஆராயப்பட்டு அறிக்கைகள் வெளிவரும் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் மூலமாகவே அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் களம் இறங்குவாரா? என்பதும் முடிவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : எங்க ஆஸ்திரேலியா அணி சிறந்தது கிடையாது.. ஏன்னா இதுக்கு காரணம் இந்திய அணிதான் – நாதன் லயன் பேட்டி
இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் அகர்கர் பேசும் பொழுது “இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு விளையாடவதற்கான காரணம் அவருக்கு ஐந்து வாரம் ஓய்வு கொடுக்கப்பட சொன்னதுதான். நாங்கள் மருத்துவ குழுவிடமிருந்து அவருடைய உடல்நிலை குறித்து அறிக்கையை பெறுவோம். மேலும் இந்த பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் அவரது காயம் குறித்து மேலும் என்ன நிலவரம்? என்பது நமக்கு முழுமையாக தெரியவரும். இதிலிருந்து தான் நாம் மேற்கொண்டு அவர் விளையாடுவாரா இல்லையா? என்கின்ற முடிவுக்கு வர முடியும்” என்று கூறி இருக்கிறார்.






