இன்று டிவால்ட் பிரிவிஸ் ஆட மாட்டார்.. கடைசி நேரத்தில் நடந்த சோகம்.. திரும்பி எப்போது வருவார்? – வெளியான தகவல்கள்

0
4
Brevis

இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் டிவால்ட் பிரிவிஸ் விளையாட மாட்டான் என அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இடையில் சேர்ந்த டிவால்ட் பிரிவிஸ் அதிரடியான ஆட்டத்தால் பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஏற்பட்ட படுதோல்விக்கு இந்த ஆண்டு சிஎஸ்கே மீண்டு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் இவரது காயம் ஏமாற்றத்தைக் கொடுத்து உள்ளது.

- Advertisement -

என்ன பிரச்சனை?

சில நாட்களுக்கு முன்பாக மகேந்திர சிங் தோனிக்கு இடது காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. பிறகு முதல் ஆறு வாரம் அவர் விளையாட மாட்டார் என்கின்ற செய்திகள் வெளியாகியது.

இந்த நிலையில் டிவால்ட் பிரிவிஸ் உடலில் ஒரு பக்கத்தில் பக்கவாட்டு காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடைசி நேரத்தில் அவர் இன்று நடைபெறும் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

- Advertisement -

எப்போது திரும்பி வருவார்?

இப்போதைக்கு அவர் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் திரும்பி வந்து விடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் காயம் இன்னும் ஒரு வாரத்தில் எந்த அளவுக்கு குணமாகிறது என்பதை பொறுத்து தான் மற்றதை கூற முடியும் என செய்திகள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க : 13 வருட வினோத துயரம் முடிந்தது.. நொறுக்கி தள்ளிய ரோகித் சர்மா ரிக்கல்டன்.. மும்பை இந்தியன்ஸ் நிம்மதி வெற்றி.. கேகேஆர் தோல்வி

இப்போதைக்கு இவரது இடத்தில் சர்பராஸ் கான் அல்லது உர்வில் படேல் இருவரில் ஒருவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனாலும் மிடில் ஓவர்களில் மிகப்பெரிய சிக்ஸர்கள் அடிக்கக்கூடிய டிவால்ட் பிரிவிஸ் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக அமைகிறது.

- Advertisement -