இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சன்.? தொடர்ந்து புறக்கணிக்கப்படும் ஸ்ரேயாஸ் ஐயர்.. வெளியான முக்கிய காரணம்

ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக சஞ்சு சாம்சன் பொறுப்பேற்பார் எனவும் ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய அணி நிர்வாகம் கைவிட்டதற்கான காரணமும் தற்போது வெளிவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக டி20 வடிவத்தில் உலக கோப்பையை வெற்றி பெற்று அசத்தியது. இந்த நிலையில் அதற்குப் பிறகு ஐபிஎல் தொடர் நடைபெற்ற முடிந்த பிறகு அடுத்ததாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போதைய டி20 கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு 35 வயது ஆகியிருக்கும் நிலையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய அணி அடுத்த கேப்டனை தேர்ந்தெடுப்பதற்கான திட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பஞ்சாப் அணியை வழிநடத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்த இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் எனவும் தகவல்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பரவியது. இந்த சூழ்நிலையில் புதிய திருப்பமாக இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சஞ்சு சாம்சன் கூடிய விரைவில் பொறுப்பேற்பார் என்று பத்திரிகைகளில் தகவல்கள் வெளி வருகிறது.

- Advertisement -

சஞ்சு சாம்சன் இந்திய t20 அணியில் கடந்த சில வருடங்களாக இடம்பெறாத நிலையில் அதற்கு பிறகு கம்பீர் தலைமையில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றார். மோசமாக விளையாடிய போதும். கம்பீர் அவருக்கு உறுதுணையாக நின்ற காரணத்தால் உலகக் கோப்பை தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு உதவினார். இதனால் இந்திய அணி அடுத்தடுத்து விளையாடும் டி20 தொடர்களில் ஒருவேளை சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டால் சஞ்சு துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஸ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியில் இடம் பெறாமல் போவதற்கான காரணம் என்னவென்றால், அவர் கடந்த சில வருடங்களாகவே இந்திய t20 அணியில் இடம்பெறவில்லை எனவும் சஞ்சு சிறப்பாக விளையாடி வரும் காரணத்தால் பிசிசிஐ அவரது பக்கம் கவனத்தைத் திருப்புகிறது எனவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -
Published by