பிளான் கொடுத்ததே நான்தான்.. கேகேஆர் எனக்கு நண்பன் கிடையாது – ஆர்சிபி சால்ட் பேட்டி

0
1313
Salt

இன்று 18வது ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் கேகேஆர் அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இதில் பேட்டிங்கில் அரைப்பதும் அடித்து ஆர்சிபி வெற்றிக்கு காரணமாக இருந்த பில் சால்ட் போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டிக்கான டாஸில் வெற்றிபெற்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணிக்கு சிறப்பாக விளையாடிய ரகானே அரைசதம் அடித்து 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி தரப்பில் குர்னால் பாண்டியா மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

ருத்ர தாண்டவம் ஆடிய ஆர்சிபி ஜோடி

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவர்களில் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 32 பந்தில் ஒன்பது பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உடன் 56 ரன்கள் எடுத்தார். இவர் கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஆட்டம் இழக்காமல் 36 பந்தில் 59 ரன்கள், கேப்டன் ரஜத் பட்டிதார் 16 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்கள். ஆர்சிபி அணி 16.2 ஓவரில் இலக்கை எட்டி, மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் தொடக்கப் போட்டியில் அபார வெற்றி பெற்றது. இரண்டு வருடமாக கேகேஆர் அணிக்கு எதிராக வெற்றி பெறாமல் இருந்து வந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

- Advertisement -

பிளான் கொடுத்ததே நான்தான்

இது குறித்து பில் சால்ட் பேசும்போது “வெற்றிக்கு பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் அமைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் விராட் கோலி ஒன்றாக சேர்ந்து பேட்டிங் செய்தது கிடையாது. இப்படி இருக்கும் பொழுது நாங்கள் முதல் முறையாக இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு இந்த மைதானம் நன்கு பரிச்சயம் ஆனது. மேலும் கொல்கத்தா வீரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதும் எனக்கு நன்றாக தெரியும்.

இதையும் படிங்க : தோனியை எப்படி கண்ட்ரோல் பண்ணுவீங்க.. ஸ்பின்க்கு எதிரா என்ன பிளான்.. எம்ஐ கேப்டனின் சுவாரசிய பதில்

“நீங்கள் இங்கு இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்யும்பொழுது பந்து நன்றாக விளையாடுவதற்கு வரும். எனவே நீங்கள் நிலைத்தன்மையுடன் இருந்து பந்தை பார்த்து அடித்து விளையாடினால் போதும். இதுகுறித்து எங்களுடைய அணி கூட்டத்தில் நான் தெரிவித்திருந்தேன். நாங்கள் இது சம்பந்தமாக பேசினோம். பிறகு நாங்கள் இன்று அதையே பின்பற்றினோம். கடந்தாண்டு இங்கு நாங்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றோம். ஆனால் ஐபிஎல் தொடரில் நண்பர்கள் என்று யாரும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -