சேவாக் சொந்தக்கார வீரரை வாங்கிய ஆர்சிபி.. ஹைதராபாத்துக்கு நல்ல வீரரை கொடுத்தது.. முடிவு சரியா?

0
4042
IPL

தற்பொழுது அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு வீரர்கள் தக்கவைப்பு மற்றும் வீரர்கள் பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. நாளையுடன் இது முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தன்னுடைய பழைய அணியான மும்பைக்கு திரும்ப வருகிறார் என்கின்ற செய்தி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் தீயாய் எரிந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து பலதரப்பட்ட கருத்துக்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் 19ஆம் தேதி துபாயில் நடைபெறும் என்று ஐபிஎல் குழு அறிவித்திருக்கிறது. தேர்தல் காலம் என்பதால் அடுத்த ஆண்டு ஐபிஎல் இந்தியாவில் நடக்குமா இல்லையா என்று இப்பொழுது வரை தெரியவில்லை.

இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் எந்த வீரர்களை கழட்டி விடுகிறோம் என்கின்ற பட்டியலை கொடுக்காமல் கடைசி நேரம் வரை பத்திரமாக வைப்பதில் கவனமாக இருந்து வருகின்றன. ஏனென்றால் அந்தப் பட்டியலை பார்த்து மற்ற அணிகள் முடிவெடுக்க வசதியாக அமைந்துவிடும் என்பதால் இப்படி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஒரு வீரரை ஒரு அணிக்கு கொடுத்து அந்த அணியிடம் இருந்து இன்னொரு வீரரை வாங்கிக் கொள்ளும் டிரேடிங் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சேவாக்கின் உறவினரான இமாச்சல் பிரதேசத்திற்காக விளையாடும் இடதுகை சுழற் பந்துவீச்சாளர் மயங்க் டகரை ஹைதராபாத் அணியிடம் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியிருக்கிறது. இவர் தாய் வழியாக இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்குக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலாக ஹைதராபாத் அணிக்கு பெங்காலுக்கு விளையாடும் இடதுகை சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சாபாஷ் அகமத்தை பெங்களூரு அணி கொடுத்திருக்கிறது.

மயங்க் டகர் பேட்டிங் செய்யக் கூடியவராக அறியப்பட்டாலும் அவருடைய பேட்டிங் புள்ளி விபரங்கள் பெரிதாக இல்லை. சாபாஷ் அகமத் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு பேட்டிங்கில் நன்றாக விளையாடியிருக்கிறார். பந்துவீச்சில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இந்த நிலையில் பெங்களூரு அணி ஒரு இடதுகை சுழற் பந்துவீச்சாளர் வேண்டும் என்கின்ற காரணத்தினால் இவரை வாங்கி இருக்கிறது என்று தெரிகிறது. ஒருவேளை இலங்கையை சேர்ந்த ஹசரங்காவை கழட்டி விட பெங்களூர் முடிவு செய்திருக்கலாம் என்று தெரிகிறது!