ஐபிஎல் 2025

வெறும் 101 ரன்.. மும்பையை தாண்டி மாஸ் ரெக்கார்டு படைத்த ஆர்சிபி.. முல்லன்பூரில் பஞ்சாபுக்கு சோகம்

இன்று ஐபிஎல் தொடரில் முதல் தகுதி சுற்றும் போட்டியில் பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக மோதிய ஆர்சிபி அணி அசத்தல் சாதனை படைத்து 101 ரன்னுக்கு பஞ்சாப் அணியை சுருட்டி இருக்கிறது.

- Advertisement -

இன்று முதல் தகுதி சுற்று போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டி பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது.

பவர் பிளேவில் பெரும் சோகம்

இன்றைய போட்டியில் ஆர்சிபி அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் மீண்டும் வந்திருக்கிறார். கடந்த போட்டியில் விளையாடிய துசாரா நீக்கப்பட்டார். மேலும் பஞ்சாப் அணியில் தென் ஆப்பிரிக்கா திரும்பிய மார்க்கோ யான்சென் இடத்திற்கு அசமத்துல்லா ஓமர்சாய் சேர்க்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியன்ஸ் ஆர்யா 5 பந்தில் 7 ரன், பிரப்சிம்ரன் சிங் 10 பந்தில் 18 ரன், ஜோஸ் இங்லீஷ் 7 பந்தில் 4 ரன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3 பந்தில் 2 ரன் எடுத்து பவர் பிளே முடிவதற்குள்ளாகவே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்கள்.

- Advertisement -

ஆர்சிபி அசத்தல் சாதனை

இதற்கு அடுத்து பஞ்சாப் அணிக்கு மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 17 பந்தில் 26 ரன்கள், அசமத்துல்லா ஓமர்சாய் 12 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்கள். இதைத் தொடர்ந்து பஞ்சாப் அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 10 ரன் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஹேசில்வுட் மற்றும் சுயாஸ் ஷர்மா 3, யாஸ் தயால் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

மேலும் இந்த போட்டியில் பவர் பிளேவில் நான்கு விக்கெட் கைப்பற்றது மூலம் ஆர்சிபி எனில் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை தாண்டி பவர்பிளேவில் அதிக விக்கெட் வீழ்த்திய அணியாக சாதனை படைத்திருக்கிறது.

இதையும் படிங்க : கம்பீர் மட்டும் எனக்கு போன் பண்ணட்டும்.. அப்புறம் நடக்கப்போற விஷயங்கள் பெருசா இருக்கும் – புஜாரா பேட்டி

2025 பவர் பிளேவில் அதிக விக்கெட்:

26 – ஆர்சிபி
23 – எம்.ஐ
20-கேகேஆர்/சிஎஸ்கே/டிசி/எஸ்ஆர்ஹெச்
19-பிபிகேஎஸ்/ஜிடி
18-எல்.எஸ்.ஜி
17-ஆர்ஆர்

- Advertisement -
Published by
Tags: RCB vs PBKS