பக்கத்தில் நிற்பதே பெருமை.. அமித் மிஸ்ரா கோலி பற்றிய சர்ச்சை எதிரொலி.. ஆர்சிபி யாஸ் தயால் வெளியிட்ட பதிவு

0
170
Virat

கடந்த இரண்டு நாட்களாக இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா இந்திய வீரர்கள் குறித்து மற்றும் அணி குறித்து வெளியிட்டு வரும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரிய சச்சரவுகளை ஏற்படுத்தி வருகிறது. விராட் கோலி பற்றி அவர் விமர்சனம் செய்திருந்த நிலையில், ஆர்சிபி அணியின் வீரர் யாஸ் தயால் அதற்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, மகேந்திர சிங் தோனி, கேஎல் ராகுல் சுப்மன் கில் என பிரபல வீரர்கள் நிறைய சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகிறார். அந்த இரண்டு நாட்களாக இணையத்தில் அவர் பேசிய விஷயங்கள்தான் ஆக்கிரமித்து இருந்தன.

- Advertisement -

கேப்டனாக மகேந்திர சிங் தோனியிடம் வாதிட்டது, கேஎல்.ராகுல் மூலமாக லக்னோ அணி கோப்பையை வெல்ல முடியாது என்று கூறியது, சுப்மன் கில் கேப்டன்சி திறமையற்றவர் என்று பேசியது என நிறைய பரபரப்பான கருத்துக்களை ஒரே பேட்டியில் கொட்டியிருந்தார்.

இதில் விராட் கோலி குறித்து கூறும் பொழுது அவரை 15 வது வயதிலிருந்து தனக்குத் தெரியும் என்றும், அவர் சமோசா பிரியர் மற்றும் இரவில் பீட்சா உண்ணாமல் உறங்க மாட்டார் என்றும் கூறியிருந்தார். அதே சமயத்தில் அவர் கேப்டன் பொறுப்புக்கு வந்து அதிகாரமும் புகழும் கிடைத்த பிறகு அவர் யாரையும் மதிப்பதில்லை நானும் பேசுவதில்லை என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் வீரர் யாஸ் தயால் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில் ” விராட் கோலி பையா உங்கள் பக்கத்தில் நான் நிற்பதே எனக்கு பெருமையான விஷயம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அமித் மிஸ்ரா விராட் கோலி பற்றி தவறான விஷயங்களை பேசி வந்த நிலையில், அதற்கு இது மறைமுக பதிலடி கொடுப்பது போல அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க : MLC 2024: 19 ஓவர்கள்.. பழைய இந்திய ஹீரோ உன்முக்த் சந்த் அதிரடி பேட்டிங்.. நைட் ரைடர்ஸ் வெற்றி

மேலும் யாஸ் தயால் வெளியிட்ட அந்த குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் பதிவின் பின்னணியில் விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பொழுது பேசியது ஒலிக்கிறது. அப்போது பேசிய விராட் கோலி “நான்என்னுடைய சிறந்ததை கொடுத்துள்ளேன். ஆனால் பதில் எப்படி என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த உரிமையாளருக்கு 120% கொடுப்பேன். இதை இப்பொழுது நான் வீரராகவும் செய்வேன் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -