தக்கவைக்கப் போகும் நான்கு வீரர்களை புகைப்படம் மூலம் குறிப்பால் உணர்த்திய பெங்களூர் நிர்வாகம் – 4 வீரர்கள் இவர்கள் தான்

0
349
RCB Retention List 2022

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு இப்போதே அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட தயாராகி விட்டனர். 2 புதிய அணிகள் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு இணைந்து ஆட உள்ளன. ஏற்கனவே இருந்த எட்டு அணிகள் வழக்கம் போல ஆட, அவை கூட இணைந்து லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் ஆட உள்ளன. மேலும் அடுத்த ஆண்டு தொடருக்கு முன்பாக மெகா ஏலம் நடக்க உள்ளதால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தற்போது இருக்கும் வீரர்களிடமிருந்து 4 வீரர்களை மட்டுமே அடுத்த ஆண்டுக்கு தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அணிகளுமே எந்த 4 வீரர்கள் என்பதை கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டன. வரும் நவம்பர் 30-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அந்தந்த அணிகள் இதை அறிவிக்க உள்ளனர்.

ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே ஆடி வரும் அணிகளுள் ஒன்று பெங்களூர் அணி. ஆனால் ஒரு முறை கூட இந்த அணி கோப்பையைக் கைப்பற்றியது இல்லை. டிராவிட், கோலி, கெயில், வெட்டோரி போன்ற திறமையான வீரர்கள் இருந்தாலும் இவர்களால் வெல்ல முடியவில்லை. இவர்களது பந்துவீச்சும் அணித் தேர்வும் எப்போதுமே இவர்களுக்கு மோசமானதாக அமைந்துவிடுகிறது. ஆனால் கடந்த இரண்டு தொடர்களாக இந்த அணி சிறப்பாகவே செயல்பட்டது. அதற்கு அந்த அணியின் பந்து வீச்சு முக்கிய காரணம். கூடவே ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாட அந்த அணியின் பல்லாண்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது போல தெரிந்தது.

- Advertisement -

தற்போது அடுத்த ஆண்டு ஏலத்துக்கு முன்பு தாங்கள் தக்க வைக்கப் போகும் நான்கு வீரர்கள் யார் என்பதை அந்த அணி நிர்வாகம் சூசகமாக கூறியுள்ளது. நவம்பர் மாதக் காலண்டரை பதிவிட்டுள்ள அந்த அணி அதில் மஞ்சள் நிறம் அடித்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை இது குறிக்கிறது. மேலும் நவம்பர் ஐந்து பக்கத்தில் ஒரு கிரீடம் பொறிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 5ல் பிறந்த விராட் கோலியை அனைவரும் கிங் என்று அழைப்பதால் விராட் கோலியும் தக்க வைக்கப்படப் போகிறார் என்பதை அறியலாம்.

அடுத்ததாக 23 என்ற எண் பக்கத்தில் ஒரு சுழற்பந்து படம் போடப்பட்டுள்ளது. அதற்கு ஜூலை 23ல் பிறந்தநாள் கொண்டாடும் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால் என்று எடுத்துக்கொள்ளலாம். அடுத்ததாக மீண்டும் 23 பக்கத்தில் ஒரு பர்பிள் கேப் தொப்பி போடப்பட்டுள்ளது. இது கடந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஹர்ஷல் பட்டேலை குறிக்கிறது . மேலும் இவரது பிறந்தநாள் நவம்பர் 23. இந்த நான்கு வீரர்களை தக்க வைப்பது என்ன விளைவை அந்த அணிக்கு ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து காணலாம்