RCB vs KKR: ஜோஷ் ஹேசில்வுட் பற்றி பெரிய அப்டேட் தந்த ஆர்சிபி டைரக்டர்.. குழப்பத்தில் ரசிகர்கள்

0
140

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 9 நாட்களுக்கு பின் மீண்டும் இன்று தொடங்க உள்ளது. இன்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்த்து கேகேஆர் அணி விளையாட உள்ளது. ஆர்சிபி அணி இன்னும் ஒரு போட்டியில் வென்றாலே எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். ஆனால் கேகேஆர் அணி ஒன்றில் தோற்றாலும் மூட்டையை கட்ட வேண்டியதுதான்.

இதனிடையே போர் பதற்றம் காரணமாக வெளிநாடு சென்ற ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் ஹேசல்வுட் இதுவரை ஆர்சிபி அணியின் முகாமிற்கு திரும்பவில்லை. ஹேசல்வுட் இல்லாமல் ஆர்சிபி அணியின் பவுலிங் வரிசையை மிகவும் பலவீனமாக இருக்கிறது. இந்த சீசனில் மட்டும் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஹேசல்வுட் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

ஹேசல்வுட் வருவாரா?

பவர் பிளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என்று ஆர்சிபி அணியின் காப்பாளனாகவே இருந்தார். ஆனால் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஹேசல்வுட் தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக களமிறங்கவில்லை. தொடர்ந்து வெளிநாடு சென்ற அவருக்கு ஆர்சிபி அணியின் மருத்துவர்களும், ஆஸ்திரேலியா நிர்வாகத்தின் மருத்துவர்களும் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

ஹேசல்வுட் வருகையை ஒவ்வொரு ஆர்சிபி ரசிகனும் எதிர்பார்த்திருக்கும் சூழலில், ஆர்சிபி அணியின் இயக்குநர் மோ போபட் ஹேசல்வுட் காயம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போபட், ஹேசல்வுட் மட்டுமே இப்போது எங்களுடன் இல்லாத ஒரே வீரர். தோளில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ஹேசல்வுட் குணமடைந்து வருகிறார். 

- Advertisement -

பட்டிதர் காயம் எப்படி?

ஆஸ்திரேலியா நிர்வாகத்துடன் இணைந்து சிகிச்சை எடுத்து வருகிறார். அவருடன் எங்களின் மருத்துவர்களும் இருக்கின்றனர். ஒவ்வொர் நாளும் அவர் காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்து வருகிறார். ரஜத் பட்டிதர் கைகளில் காயம் ஏற்பட்டிருந்தது. நல் வாய்ப்பாக அவர் காயமடைந்த போது ஐபிஎல் தொடர் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. 

இதனால் ரஜத் பட்டிதர் முழு ஓய்வில் இருந்ததால், எதிர்பார்த்ததற்கு முன்பாகவே குணமடைய தொடங்கினார். அவரின் தொடர் பயிற்சி காரணமாக பேட்டை கையில் எடுத்து விளையாட முடிகிறது. தற்சமயம் அவர் சிறப்பாக விளையாடுகிறார் என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் ரஜத் பட்டிதர் கேப்டனாக செயல்படுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஹேசல்வுட் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதையே போபட் சுற்றி வளைத்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -