ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 42வது போட்டி இன்று நடைபெற்ற நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பெங்களூர் அணியின் இன்னிங்ஸ் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் தொடங்கினார்கள். இதில் தொடக்க வீரர் பில் சால்ட் 23 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுன்ரியுடன் 26 ரன்கள் குவித்து வெளியேறினார்.
மறுமுனையில் விராட் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருடன் ஜோடி சேர்ந்த படிக்கல் 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார். இறுதிக்கட்டத்தில் டிம் டேவிட் 23 ரன்கள் மற்றும் ஜித்தேஷ் சர்மா 20 ரன்கள் என அதிரடியாக விளையாட விராட் கோலி 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதனால் ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் வைபவ் சூரியவன்சி மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி 4.2 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீரர் வைபவ் 12 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 16 ரன்கள் எடுத்து புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் வெளியேறினார். அதற்குப் பிறகு நித்திஷ் ராணா களம் இறங்கி விளையாட மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 49 ரன்களில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க:42 பந்து 70 ரன்கள்.. டி20ல் ஒரே நாளில் விராட் கோலி படைத்த சாதனை.. அவருக்கு நடந்த 2 முக்கிய நிகழ்வுகள்.. முழு விபரம்
அதற்குப் பிறகு நித்திஷ்ரானா 28 ரண்களில் வெளியேற, கேப்டன் ரியான் பராக் 10 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்கள் குவித்து அதிரடியாக ஆடி ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு இறுதிக் கட்டத்தில் துருவ் ஜூரேல் 34 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க, ராஜஸ்தான் அணியின் தோல்வியை யாராலும் தவிர்க்க முடியவில்லை. இதனால் அந்த அணி இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆர் சி பி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹாசில் வுட் 4 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டில் கைப்பற்றினார். சின்னசாமி மைதானத்தில் ஹட்ரிக் தோல்வி அடைந்த rcb இந்த வெற்றியின் மூலமாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.