“14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ராஜஸ்தானை பொட்டலம் கட்டிய ஆர்சிபி” – மிகப்பெரிய வெற்றியுடன் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது!

0
584

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் பதினாறாவது சீசன் மார்ச் மாதம் 31ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது . இந்தத் தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன . பெரும்பாலான நிகழ்வு 12 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் பிளே ஆப் சுற்றுக்கான பந்தயம் சூடி பிடித்திருக்கிறது .

இன்று நடைபெற்ற அறுபதாவது போட்டியில் பெங்களூரு ஆர்சிபி அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின . இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்தது . அந்த அணியின் கேப்டன் பாப் டூபிளசிஸ் 55 ரன்களும் மேக்ஸ்வெல் 54 ரன்கள் எடுத்தனர் . இறுதியில் அதிரடியாக விளையாடிய அனுஜ் ராவத் 29 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார் .

- Advertisement -

172 ரன்கள் என்ற வெற்றிலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர் . இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சீவ் சாம்சன் நான்கு ரன்களில் வெளியேறி அந்த அணிக்கு மேலும் அதிர்ச்சி அளித்தார் .

ஜோ ரூட் மற்றும் படிக்கல் என அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்கள் அனைவரும் சொற்பரன்களில் ஆட்டம் இழக்க ராஜஸ்தானி தடுமாறியது . பவர் பிளே ஓவர்களுக்கு உள்ளே ஐந்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை முடிவு செய்தது .

ஒரு முனையில் ஹெட் மேயர் மட்டும் அதிரடியாக ஆட மற்ற அனைத்து வீரர்களும் ஆட்டம் இழந்தனர் . இறுதியில் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹெட்மேயர் பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அவர் 19 பந்துகளில் 33 ரன்களை எடுத்திருந்தார் . அதில் நான்கு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும்

- Advertisement -

பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்கள் மீதமருந்த விக்கெட்டுகளையும் விரைவாக கைப்பற்றியதால் 10.3 ஓவரில் 59 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது ராஜஸ்தான் . இதன் மூலம் 112 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு தனது பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது .

ராஜஸ்தான் அணியில் ஜோ ரூட் மற்றும் ஹெட்மேயர் தவிர எந்த ஒரு வீரரும் இரட்டை இலக்கண்களை கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . அந்த அணி பெற்றிருக்கும் மோசமான தோல்வி இதுவாகும் . இதன் மூலம் ராஜஸ்தான் அணி ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது குறைந்த பட்ஜஸ் கோரை பதிவு செய்திருக்கிறது . இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூர்ணியுடன் 58 ரன்களுக்கு ஆளவட்டானது குறிப்பிடத்தக்கது . தற்போது 59 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது .