ஐபிஎல் 2025

எதிரணி வீரரின் திட்டத்தை பார்த்து.. எங்க பேட்ஸ்மேன்கள் கத்துக்கணும்.. அப்பதான் சொந்த மண்ணில் ஜெயிக்க முடியும் – ஆர்சிபி பவுலர்

நேற்று நடைபெற்ற முடிந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடிய ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசை குறித்து அதன் வேகப்பந்து பேச்சாளர் ஜாஸ் ஹாஸ் ஹேசில் வுட் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

பெங்களூர் அணி தோல்வி

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மழை காரணமாக 14 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டு பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளத்தின் சூழ்நிலையை உணராமல் தொடக்கத்தில் இருந்து அதிரடியான ஆட்டத்தை ஆட முயற்சித்து பெங்களூர் அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை விட ஆரம்பித்தனர். இருப்பினும் இறுதிக்கட்டத்தில் டிம் டேவிட் சிறப்பான ஆட்டத்தை விளையாடி 26 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு பெங்களூர் பந்துவீச்சாளர்கள் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தனர். தொடக்கத்தில் விக்கட்டுகளை இழந்தாலும் ஆடுகளத்தின் சூழ்நிலையை புரிந்து கொண்டு மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அந்த அணியின் நெகல் வதேரா அற்புதமாக விளையாடி 33 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அந்த அணியின் ஜாஸ் ஹாசில் வுட் மூன்று ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

பேட்டிங் வரிசை இதை செய்யணும்

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணி குறித்து அவர் பேசும் போது ” இது வழக்கமான சின்னசாமி ஆடுகளம் போல் இல்லை. ஆடுகளத்தில் எப்போதும் வழக்கமான பவுன்ஸ் இருக்கும். ஆனால் இப்போது பார்க்கும்போது கடந்த காலங்களில் இருப்பதை விட இப்போது சீராக இல்லை. 6 முதல் 8 மீட்டர் நீளத்தில் பந்து வீசினாலே அது பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சிரமமாக மாறிவிடுகிறது. இந்த சீசனில் நாங்கள் அதனை நன்றாக உணர்ந்திருக்கிறோம்.

இதையும் படிங்க:பலமான பேட்டிங் வரிசை இருந்தும்.. இந்தப் பிரச்சனையை நாங்கள் கவனிக்கிறதே இல்ல.. அதுதான் தோல்விக்கு காரணம் – ஆர்சிபி கேப்டன்

நாங்கள் இங்கு தோற்ற முதல் இரண்டு ஆட்டங்களில் உன்னிப்பாக கவனித்து பார்த்தால் எதிரணி பேட்ஸ்மேன் ஒருவர் சிறப்பாக விளையாடி கூட்டணி அமைத்து இன்னிங்ஸில் தாமதமாக அதிக ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். எனவே எங்கள் அணியின் முதல் ஐந்து அல்லது ஆறு வீரர்கள் 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்தால் சொந்த மண்ணில் எங்கள் அணி வெற்றி பெறுவதற்கு சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்” என அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by