தற்போது இந்திய அணி மற்றும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா இன்று வரையில் தோனியிடம் பேசுவதற்கு தனக்கு தயக்கம் இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் உடனான பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் தொடர் மிக மோசமாக அமைந்தது. முதல் முறையாக சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. மேலும் ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. இந்த சூழ்நிலையில் தோனி உடனான தனது அறிமுகம் மற்றும் நட்பு குறித்து அவர் பேசியிருக்கிறார்.
என்னுடைய முதல் சந்திப்பு இதுதான்
இதுகுறித்து ரவீந்திர ஜடேஜா பேசும்பொழுது ” சென்னையில் 2005 ஆம் ஆண்டு நடந்த சேலஞ்சர்ஸ் டிராபியின் போது நான் முதல் முறையாக தோனியை சந்தித்தேன். நான் மும்பையில் இருந்து விமானத்தில் வந்து கொண்டிருந்தேன். அவரும் அதே விமானத்தில் அங்கிருந்து வந்திருக்க வேண்டும். நான் எக்கனாமி கிளாசில் அமர்ந்திருந்தேன். அவர் பிசினஸ் கிளாஸில் அமர்ந்திருந்தார்”
“அங்கிருந்த எல்லோரும் தோனி முன்னால் இருப்பதாக கூறினார்கள். அப்போது நான் அவரை சந்திப்பதற்கு மிகவும் தயங்கினேன். அதுமட்டுமில்லாமல் இப்போது கூட சந்திப்பதற்கான மனநிலையில் அவர் இல்லை என்பது எனக்கு தெரிந்தால், அவரை சந்திக்க நான் தயங்குகிறேன். அவருடைய முகத்தில் இருந்து எனக்கு இது தெரிந்து விடும்”
போன் உடைந்ததால் கிளம்பி விட்டேன்
“பொதுவாக அவர் பெரிய அளவில் கோபப்பட மாட்டார் ஆனால் அவருக்கும் கோபம் வரும். ஆனால் அந்த நேரத்தில் அவர் எதுவுமே சொல்ல மாட்டார். மேலும் அந்த முதல் சந்திப்பின் போது நான் அவருடன் இணைந்து ஹோட்டல் அரைக்கு செல்ல வேண்டும் என அணியின் மேனேஜர் சொன்னார். நான் எப்படி அவருடன் சேர்ந்து செல்ல முடியும் என்று எனக்கு பெரிய தயக்கமாக இருந்தது”
இதையும் படிங்க : 201 ரன்.. பங்களாதேஷை புரட்டி எடுத்த பாகிஸ்தான் புதிய அணி.. ஷதாப் கான் ஆல்ரவுண்ட் அசத்தல்.. முதல் டி20
“ஏனென்றால் அந்த விமானத்தில் இருந்த தோனி நீளமான தலைமுடியுடன் நல்ல புகழ்பெற்றவராக இருந்தார். நான் அவருடன் சேர்ந்து செல்வதற்கு மிகவும் தயங்கிக் கொண்டு இருந்தேன். இந்த நேரத்தில் அவருடைய மொபைல் தரையில் விழுந்து விட்டது. இதன் காரணமாக அவர் கொஞ்ச நேரம் அங்கு காத்திருக்க வேண்டியதாக இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டு நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன்” என்று கூறி இருக்கிறார்.






