தற்போது ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் அணிகள் மாறி செல்லும் டிரேடிங் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி மூன்று சாம்பியன் பட்டங்கள் வென்றுள்ள ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு செல்வது சிஎஸ்கே ரசிகர்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது. இன்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது.
ஐபிஎல் தொடரில் சாம்பியன் அணியான சிஎஸ்கே இதுவரையில் தங்களது வீரர்களை இன்னொரு அணிக்கு கொடுக்காது. வேறு அணியில் இருக்கும் வீரர்களை காசு கொடுத்து நேரடியாக டிரேடிங் செய்யும். தற்போது முதல் முறையாக வீரர்களை பரிமாற்றம் செய்து இன்னொரு வீரரை வாங்கி இருக்கிறது.
தற்போது சிஎஸ்கே அணியின் நிலைமை மிகவும் இருப்பதாலும், மேலும் சிறந்த வீரர்கள் ஏலத்திற்கு பெரும்பாலும் வரமாட்டார்கள் என்பதாலும், தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் தங்களது கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்திருக்கிறது. ஐபிஎல் மெகா ஏலத்தில் சரியாக செயல்படாததற்கான தண்டனை இதுவென ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
தற்போது சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து 18 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணி வாங்கியிருக்கிறது. ஆனால் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு மட்டுமே வாங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு சிஎஸ்கே அணியில் அவருக்கு 18 கோடி கொடுக்கப்பட்டது. தற்போது நான்கு கோடி ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: 806 நாள்கள் 84 இன்னிங்ஸ்.. பாபர் அசாமின் சோகம் தீர்ந்தது.. இலங்கை மீண்டும் தோல்வி.. பாகிஸ்தான் தொடரை வென்றது
மேலும் சிஎஸ்கே அணி சாம் கரனையும் சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேடிங் செய்து இருக்கிறது. இவரை 2.70 கோடி ரூபாய்க்கு வாங்கி அதே விலைக்கு டிரேடிங் செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல டிரேடிங் முடிவுகள் இன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.