ரவி அஸ்வின் மற்றும் முகமது சிராஜிடம் நான் முகம் காட்டியதற்கு காரணம் இருக்கிறது – விவரிக்கும் ரியான் பராக்

0
47

நடந்து முடிந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி கோப்பையை கைப்பற்றியது. லீக் தொடர், முதல் தகுதி சுற்று ஆட்டம் அதை தொடர்ந்து இறுதிப் போட்டி என மூன்று போட்டியிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் அணியிடம் தோல்வி அடைந்தது.

முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் இறுதிநேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரியான் பராக் இடையே ஏதோ ஒரு வாக்குவாதம் நடந்தது போல் இருந்தது. அது சம்பந்தமான விளக்கத்தை அவர் தரப்படும் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

அவரே என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்

ஆட்டத்தின் இறுதி பந்தில் டெயில் எண்டர்ஸ் இருக்கும் பட்சத்தில் ஒரு ரன் அல்லது 2 ரன் ஓட முயற்சிப்பார்கள். ஆனால் அப்பொழுது நான் எதிர் முனையில் நின்று கொண்டிருந்தேன். கடைசி பந்து வைடாக வீசப்பட்டது. பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்கும் பட்சத்தில் நான் ஸ்டிரைக்கை நோக்கி ஓடினேன். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் ரன் ஓட மறுத்துவிட்டார்.

- Advertisement -

ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலுக்கு ஓடவில்லை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதன் காரணமாகவே சிறு விரக்தி என்னிடம் வெளிப்பட்டது. ஆனால் போட்டி முடிந்தவுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் என்னிடம் வந்து அது சம்பந்தமாக மன்னிப்பு கேட்டார் அவ்வளவுதான் அதில் ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.

முகமது சிராஜ் தான் என்னிடம் அவ்வாறு பேசினார்

2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஹர்ஷால் பட்டேல் என்னுடைய விக்கெட்டை கைப்பற்றிய உடன் தன்னுடைய கைகளில் சைகை செய்தார். அது என் மனதில் ஒரு ஓரத்தில் இருந்துகொண்டே இருந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக ஒரு ஓவரில் அவருடைய பந்துகளை நான் விளாசினேன்.

எனது பதிலுக்கு நானும் அந்த சைகை செய்தேன். சைகை செய்தேனே தவிர வேறு ஒன்றும் நான் பேசவில்லை. ஆனால் முகமது சிராஜ் என்னிடம் நேராக வந்து உன்னுடைய வயதிற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதுதான் அங்கு நடந்தது என்றும் தற்பொழுது ரியான் பராக் விளக்கிக் கூறியுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரிம் நான் அவ்வாறு நடந்து கொள்ள காரணம் இருக்கிறது – விவரிக்கும் ஒரு ரியான் பராக்

- Advertisement -