நானே சொல்றேன்.. சிஎஸ்கேவுக்கு சாம்சன் வரது ரொம்ப கஷ்டம்.. காரணம் இத்தனை இருக்கு – அஸ்வின் விளக்கம்

0
48
Sanju

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு டிரேடிங் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் அதற்கான காரணங்கள் குறித்தும் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்திருக்கிறார்.

தற்போது சர்வதேச கிரிக்கெட் தாண்டி ஐபிஎல் தொடர் குறித்த செய்திகள் அதிக முக்கியத்துவத்தை பற்றி வருகிறது. காரணம் ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுவதாகவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

- Advertisement -

உண்மை என்ன?

சில மாதங்களுக்கு முன்பு எம்எல்சி டி20 தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டியை நேரில் பார்ப்பதற்கு சஞ்சு சாம்சன் சென்றார். இத்துடன் அவருக்கு ராஜஸ்தான் ராயல் சாணி நிர்வாகத்துடன் நல்ல முறையில் ஆன உறவு இல்லை என்று இந்த ஆண்டு ஐ பி எல் தொடரின் போதே கூறப்பட்டு வந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்கள் நிர்வாகத்தில் இருக்கும் ரியான் பராக் உறவினர் அவரை கேப்டனாக மாற்ற பெரும் முயற்சி செய்து வருவதாகவும், இதற்கு ராகுல் டிராவிட் ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் தகவல்கள் பரவின. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் அந்த அணியை விட்டு வெளியேறி சிஎஸ்கே அணிக்கு விளையாட விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் இது நடக்க வாய்ப்புகள் குறைவு என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கேவுக்கு சாம்சன் வருவது கடினம்

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் டிரேடிங் ஏன் வேலை செய்யாது? என்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சானை டிரேடிங் செய்து விட்டு, மற்ற அணிகளிடம் டிரேடிங் மூலம் வீரர்களை தேடினால் மதிப்பு மிக்க வீரர்கள் கிடைப்பது கடினம். உதாரணமாக லக்னோ அணியிடமிருந்து ரவி பிஸ்னாயை வாங்க நினைத்தால், அவர்கள் சாம்சனை கேட்பார்கள். ஆனால் லக்னோ அணிக்கு அதற்கான பணம் இல்லை”

இதையும் படிங்க : எங்க பாகிஸ்தான் வீரர்கள் சுயநலவாதிகள்.. பாபர் ரிஸ்வான் பண்ற வேலை இந்த மாதிரிதான் – அக்தர் விமர்சனம்

“மேலும் சிஎஸ்கே எப்பொழுதும் டிரேடிங் செய்வதில் நம்பிக்கை வைத்திருப்பதில்லை. இத்துடன் சிஎஸ்கே அணி ஜடேஜா மற்றும் சிவம் துபே யாரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ட்ரேடிங் மூலம் விட்டுக் கொடுக்காது என்று எனக்கு தெரியும். இப்படிப்பட்ட காரணங்களால் சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் டிரேடிங் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -