இந்திய அணியில் கம்பீர் இடத்தில் தான் இருந்தால் ரிஷப் பண்ட் இடம் ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை வலியுறுத்தி கூறுவேன் என இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்ததின் மூலமாக பல்வேறு சாதனைகளை படைத்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு இருக்கும் அபாரமான பேட்டிங் திறமை குறித்து கிரிக்கெட் உலகெங்கும் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே ரிஷப் பண்ட் இடம் சிறந்த தற்காப்பு ஆட்டம் இருப்பதாகவும், அவர் அதை புரிந்து கொண்டு விளையாடினால், மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேனாக அவரால் வர முடியும் எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருந்தார். தற்போதும் இதை வலியுறுத்தி அவர் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” ரிஷப் பண்ட் இரண்டு சதங்கள் அடித்தார். இதன் மூலம் அவர் ஒரு சிறப்பான பட்டியலில் இணைகிறார். விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோர் இருக்கும் பட்டியலுக்குள் நுழைகிறார். மேலும் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக அவர் அதிக சதங்கள் அடித்தவராக டெஸ்ட் கிரிக்கெட்டில் மாறியிருக்கிறார்”
“மேலும் ரிஷப் பண்ட் ஒரு சிறந்த தற்காப்பு வீரர். அவரிடம் அருமையான தற்காப்பு ஆட்டத்திற்கான பேட்டிங் டெக்னிக் இருக்கிறது. இந்த விஷயத்தை நான் மீண்டும் கூற விரும்புகிறேன். அவரிடம் கிரிக்கெட் புத்தகத்தில் இருக்கும் ஷாட்டில் இல்லாத எதுவுமே கிடையாது. எல்லாவற்றையும் அவர் வைத்திருக்கிறார்”
“கம்பீர் இடத்தில் நான் இருந்திருந்தால் ‘ நீங்கள் உங்களுடைய திறமைக்கு சிறப்பாக விளையாடினர்கள். நீங்கள் ஒரு பேட்ஸ்மேனாக எப்பொழுதும் தொடர வேண்டும்’ என்றுதான் சொல்லுவேன். எனக்கு எப்பொழுதும் தோன்றக்கூடிய விஷயம் அவர் 130 ரன் எடுத்தால் இரட்டை சதத்திற்கு அவரை செல்ல சொல்ல வேண்டும். உங்களுடைய கீழ் வரிசையில் பேட்டிங் பவர் இல்லாததால் நீங்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதுதான் நான் அவரிடம் சொல்ல விரும்பும் விஷயம்”
இதையும் படிங்க : சாய் சுதர்சன் கிட்ட பேசி.. அவர கழட்டி விடுங்க.. 2வது டெஸ்ட்ல இதுக்காக இத செய்யணும் – தீப்தாஸ் குப்தா பேச்சு
இந்த நிலையில் கீழ் வரிசை பேட்டிங் பங்களிப்பு இல்லாத காரணத்தினால் மீண்டும் ரிஷப் பண்ட்டை ஆறாவது இடத்திற்கு கொண்டு வருவது குறித்து இந்திய நிர்வாகம் யோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதற்கு இந்திய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.