இந்திய கிரிக்கெட்

ரிஷப் பண்ட்டால அதை செய்ய முடியாது.. ருதுராஜாலதான் செய்ய முடியும்.. செலக்சன் தவறு – அஸ்வின் விமர்சனம்

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் ருதுராஜ் சேர்க்கப்படாதது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த தென் ஆப்பிரிக்க ஒரு நாள் தொடரில் ருதுராஜுக்கு மிடில் ஆர்டரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார். மேலும் அவர் பேட்டிங் ஆர்டரில் நான்காவது இடம் வரையில் விளையாட கூடியவராக இருக்கிறார். இந்த நிலையில் ரிஷப் பண்ட் மிடில் ஆர்டர் பேக்-அப் பேட்ஸ்மேன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இது நேரடி போட்டி

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “ரிஷப் பண்ட் ஒரு அற்புதமான வீரர். இது அவரது தரத்தைப் பற்றியது கிடையாது. மேலும் மிடில் ஆர்டரில் நாம் ஒரு மோதலை பார்க்கிறோம். அது ரிஷப் பண்ட் மற்றும் ருதுராஜ் இருவருக்குமான நேரடி மோதல்”

“ரிஷப் பண்ட்க்கு சாதகமாக இருக்கக்கூடிய ஒரே விஷயம் அவர் இடது கை வீரராக இருப்பதுதான். தேர்வின் போது ஒரு பெரிய விவாதம் நடந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் தேர்வாளர்கள் இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்று நினைத்து இருப்பார்கள்”

- Advertisement -

ரிஷப் பண்ட் செய்ய முடியாது

“ருதுராஜ் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். ஆனால் அவர் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடும் திறன், ஒரு இன்னிங்ஸை கட்டமைத்து விளையாடும் திறன் அற்புதமானவை. நீங்கள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவும் கருதலாம்”

இதையும் படிங்க : சுப்மன் கில்லை டீமை விட்டு தூக்குனது ஆச்சரியமா இருக்கு.. அது இதைத்தான் காட்டுது – ரிக்கி பாண்டிங் பேச்சு

” ரிஷப் பண்ட் அணியில் இருப்பதால், தற்போது அவர் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட முடியும் என நான் நினைக்கவில்லை. அவர் முதல் மூன்று இடங்களில் பேட்டிங் செய்யக் கூடிய வீரராகவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இருக்கிறார். அவர் துவக்க வீரராக வரவேண்டும் இல்லை மூன்றாவது இடத்தில் வரவேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by