விராட் கோலி அப்பவே சொன்னதை பிசிசிஐ செய்யணும்.. இல்லனா இந்தியாவுல டெஸ்ட் கிரிக்கெட் அழியும் – அஸ்வின் கருத்து

0
39
Virat

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பாக கூறிய ஒரு யோசனையை தற்போது பிசிசிஐ இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ரசிகர்களின் வரவேற்பு பெரிய அளவில் இல்லை. அதே சமயத்தில் டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வார இறுதி நாட்களில் கூட்டம் இருந்தது. எனவே இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை சில குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே நடத்த வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் எப்படி இருக்கிறார்.

- Advertisement -

எதற்காக இதை செய்ய வேண்டும்?

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” நாம் நிரந்தர டெஸ்ட் கிரிக்கெட் மையங்களை உருவாக்குவது கூட்டத்தை வரவழைப்பதற்காக மட்டும் கிடையாது, நம்முடைய வீரர்கள் குறிப்பிட்ட மைதானங்களில் விளையாடுவதால் ஆடுகளத்திற்கும் நன்றாக பழகிக் கொள்வார்கள் என்பதற்காகத்தான். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஆடுகளங்களும் வித்தியாசமானவை. உதாரணமாக கிழக்கில் உள்ள மைதானத்தின் ஆடுகளங்களில் பவுன்ஸ் இருக்காது. அந்த மைதானங்கள் டெஸ்ட் போட்டிக்கு மிகவும் சாதாரணமானதாக மாறும்”

“நாம் ஒரு டெஸ்ட் போட்டியை ஒரு மைதானத்தில் நடத்தும் பொழுது சிறந்த ஆடுகளம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆடுகளம் சிறப்பாக இருப்பதும் நம் வீரர்கள் அந்த ஆடுகளத்தில் கண்டிஷனுக்கு பழகி இருப்பதும்தான் சொந்த கண்டிஷன் தரும் நன்மையாக இருக்க முடியும். ஆனால் இப்படி இல்லாவிட்டால் நீங்கள் இந்தியாவில் விளையாடினாலும் அது சொந்த மைதானம் என்று சொல்ல முடியாது”

- Advertisement -

விராட் கோலி ஏற்கனவே சொன்னது

“தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மற்றும் கௌகாத்தி மைதானங்களில் விளையாடப் போகின்றோம். அப்போது இங்கு ஆடுகளங்கள் சிறப்பாக இருக்க வேண்டாமா? எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என விராட் கோலி ஆறு வருடங்களுக்கு முன்பே சொல்லி இருந்தார். இதையெல்லாம் மாற்றி அமைப்பதற்கு இது சரியான நேரம் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்”

இதையும் படிங்க : ரஞ்சி போட்டி நாளை தொடக்கம்.. நேரம் என்ன? எந்த சேனல், ஒடிடியில் பார்க்கலாம்

“கவுகாத்தியில் நடைபெறும் ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளுக்குமே அது சொந்த மைதானமாக இருக்க முடியாது. ஏனென்றால் இந்திய அணியில் இருந்து யாருமே அந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் கிடையாது. எனவே தான் நிரந்தரமாக டெஸ்ட் போட்டிகள் நடத்த ஐந்து அல்லது ஆறு மைதானங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -