யூடியூப் சேனல் வருமானத்துக்கு பேசறமா?.. கம்பீர் பேச்சுக்கு அஸ்வின் பதிலடி.. மீண்டும் கேள்வி

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் நிதீஷ் குமார் ரெட்டிக்கு உள்நாட்டில் வாய்ப்பு தருவது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் நிதீஷ் குமார் ரெட்டி இடம் பெற்று விளையாடும் பொழுது அவரைவிட சிறப்பாக பேட்டிங்கில் பங்களிப்பை கொடுத்திருக்கின்ற ஆல்ரவுண்டர் அக்சர் படேலுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. இதுகுறித்து ரவிச்சந்திரன் விமர்சனம் செய்திருக்கிறார்.

கம்பீர் கோபமான பேச்சு

இந்த நிலையில் ஹர்ஷித் ராணா மூன்று வடிவ கிரிக்கெட் இந்திய அணிகளிலும் இடம்பெறுவது குறித்து தங்களது யூடியூப் சேனல்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இருவரும் கடுமையான முறையில் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்திருந்தார்கள்.

இந்த நிலையில் ஹர்ஷித் ராணா போன்ற ஒரு இளம் வீரரை இந்த வகையில் விமர்சிப்பது சரியான மனநிலை இல்லை என்றும், தங்களது யூடியூப் சேனல் சிறந்த முறையில் இயங்குவதற்கு இப்படியான விமர்சனங்களை செய்யக்கூடாது என்றும், வேண்டுமென்றால் அர்ஷித் ராணாவை விட்டுவிட்டு தன்னை விமர்சிக்கலாம் என்றும் கம்பீர் கோபமாக கூறியிருந்தார்.

- Advertisement -

அஸ்வின் மீண்டும் விமர்சனம்

இந்த நிலையில் மீண்டும் விமர்சித்துள்ள அஸ்வின் பேசும்பொழுது “நிதீஷ் குமார் ரொட்டி இந்த மாதிரியான ஒரு ரோலில் தான் டெஸ்ட் அணியில் இருப்பார் என்றால் அதற்கு பதிலாக ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் அல்லது பவுலர் விளையாடலாம். அக்சர் இந்த இடத்தில் விளையாடுவதற்கு என்ன குறைவாக செய்துவிட்டார்? நிதீஷ் வந்து விளையாடும் இடத்தை பார்க்கும் பொழுது அங்கு உங்களுக்கு ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் தேவையாக இருக்கிறது. அப்படி என்றால் அதை அக்சர் படேல் மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார்”

இதையும் படிங்க : 93 ரன்.. உலக சாம்பியன் தெஆ-வை வீழ்த்திய பாகிஸ்தான்.. புள்ளி பட்டியலில் மாஸ்.. இந்திய அணிக்கு சாதகம்

“அக்சர் படேலிடம் சுழல் பந்துவீச்சிக்கு எதிராக சிறந்த தற்காப்பு பேட்டிங் இருக்கிறது. மேலும் உங்களிடம் சிராஜ், பும்ரா இருக்கும் நிலையில் நீங்கள் நிதீஷ் குமார் ரெட்டியை பேட்டிங் ஆழத்திற்காகவே பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்கிறேன். இது ஒன்று மட்டும்தான் புரிகிறது. ஆனால் நிதிஷ்குமார் ரெட்டி ரோல் என்னவென்பது தெளிவில்லாமல் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts