உலக கிரிக்கெட்

கோப்பை ஜெயிச்சு கொடுத்த ரோகித்துக்கே இடமில்லை.. 4 இந்திய வீரர்.. 0 பாக் வீரர்.. அஸ்வினின் CT பிளேயிங் லெவன்

இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான சிறந்த ப்ளேயின் லெவன் அணியை ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்த அணியில் நான்கு இந்திய வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிட்டதக்க விஷயமாக ஒரு பாகிஸ்தான் வீரர் கூட தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் தேர்ந்தெடுத்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா மற்றும் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் இருக்கிறார்கள். மூன்றாவது வரிசையில் விராட் கோலி மற்றும் நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆக்கிரமித்துள்ளனர். முதல் நான்கு பேருமே தங்கள் அணிக்காக அந்த வரிசையில் சிறந்த பங்களிப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

மிடில் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் ஜோஸ் இங்கிலீஷ், அதற்குப் பிறகு தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்கிறார்கள். ஆல் ரவுண்டர் பிரிவில் ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்மதுல்லா ஓமர் சாய் மற்றும் நியூசிலாந்து அணியின் மைக்கேல் பிராஸ் வெல் ஆகியோர் இடம் பெறுகின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரை நியூசிலாந்து அணியின் சிறந்த பவுலர் மார்ட் ஹென்றி, இந்தியாவின் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இருக்கின்றனர்.

- Advertisement -

அஸ்வின் தேர்ந்தெடுத்துள்ள அணி

இதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் மிச்சல் சான்ட்னர் பன்னிரண்டாவது வீரராக இடம்பெற்றிருக்கிறார். இதில் இந்திய அணி ரோகித் சர்மா இடம்பெறவில்லை என்ற ஆச்சரியமான விஷயமும் இருக்கிறது. மேலும் ஆல் ரவுண்டர் பிரிவில் கலக்கிய ஹர்திக் பாண்டியா, ஜடேஜா மற்றும் விக்கெட் கீப்பர் வரிசையில் கேஎல் ராகுல் ஆகியோர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வருண் சக்கரவர்த்தி லீக் பிரிவில் ஒரு போட்டியில் மட்டும் விளையாடி அதற்குப் பிறகு அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல குல்தீப் யாதவ் சுழற் பந்துவீச்சில் முக்கிய பங்காற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயங்களாகும்.

இதையும் படிங்க:ஐபிஎல் எல்லாம் விஷயமே இல்லை.. இளைஞர்கள் முதல்ல இதுக்குதான் முக்கியத்துவம் தரணும் – ரிஷப் பண்ட் அறிவுரை

அஸ்வின் தேர்ந்தெடுத்துள்ள சாம்பியன்ஸ் டிராபி ப்ளேயிங் லெவன் : ரச்சின் ரவீந்திரா, பென் டக்கெட், விராட் கோலி, ஸ்ரேயாஸ் லியர், ஜோஷ் இங்கிலிஸ், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மைக்கேல் பிரேஸ்வெல், மாட் ஹென்றி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, மிட்செல் சான்ட்னர் (12வது வீரர்)

- Advertisement -
Published by

Recent Posts