கடந்த புதன்கிழமை நடைபெற்று முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து தங்களது அணிகளை பலப்படுத்திக் கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே எடுத்துள்ள வீரர்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதுமே அனுபவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில் இந்த முறை இளம் தலைமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இரண்டு அன் கேப்டு இந்திய வீரர்களை தலா 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் சில வெளிநாட்டு வீரர்களையும் எடுத்து பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசையை பலப்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் ஒரு சில ஆட்டங்களில் இடம் பிடித்து தனது திறமையை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் திறமை இருந்தும் பல ஐபிஎல் அணிகள் இவரை வாங்க மறுத்த நிலையில் தற்போது சிஎஸ்கே 75 லட்ச ரூபாய்க்கு இவரை ஏலத்தில் எடுத்துள்ளது. எனவே இவரை சிஎஸ்கே அணி சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “சர்ப்ராஸ் கான் ஒரு அணிக்காக விளையாட வேண்டும் என்றால் அது நிச்சயம் சிஎஸ்கேவாகத்தான் இருக்கும். சென்னை ஆடுகளத்தின் நிலைமைகள் விக்கட்டுக்கு பக்கவாட்டில் அடிக்கக்கூடிய ஸ்வீப் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் என்று திறம்பட அடிக்கக் கூடிய திறமையை பெற்றிருக்கிறார். இவர் இந்த ஆடுகளத்தில் சுதந்திரமாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்துவதை நான் காண விரும்புகிறேன். இந்த ஐபிஎல் தொடரில் அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சிஎஸ்கே சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க:சூரியகுமார் செய்றத.. மத்த கேப்டன் உங்களால் செய்ய முடியாது.. நாம அதை கொண்டாடல – இர்பான் பதான் வருத்தம்
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சர்பராஸ் அவரது அடிப்படை விலையிலேயே ஒரு திட்டத்தின் பகுதியாக சிஎஸ்கே வைத்திருப்பார்கள் என்று தெரிகிறது. அவரது தனித்துவமான பேட்டிங் வரிசை தற்போது விளையாடும் சிஎஸ்கே வீரர்களின் பேட்டிங் திறனோடு முற்றிலும் மாறுபட்டது. அவர் எப்போதுமே அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டியவர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் திரும்ப ஐபிஎல் அணிக்காக விளையாடிருப்பதை எண்ணி நான் மகிழ்கிறேன்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.