இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்து வரும் நிலையில், அவருடைய இன்னொரு சிறப்பான அம்சம் குறித்து யாரும் கொண்டாடவில்லை என இர்ஃபான் பதான் கூறியிருக்கிறார்.
அடுத்த ஆண்டு 2026 பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. இந்த நிலையில் இந்திய t20 அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்து வருகிறது. மேலும் இவர்கள் இருவரும் டாப் ஆர்டரில் இருப்பது அணிக்குப் பெரிய தலைவலியை உருவாக்குகிறது.
இதை யாரும் கொண்டாடவில்லை
இதுகுறித்து இர்ஃபான் பதான் கூறும்பொழுது ” நான் மீண்டும் திரும்ப திரும்ப சொல்கிறேன் நாம் சூரியகுமார் யாதவின் கேப்டன்சி குறித்து பெரிய அளவில் கண்டுகொண்டு கொண்டாடவில்லை. அவர் பேட்டிங்கை நாம் நிறைய கொண்டாடி இருக்கிறோம். தற்போது அவர் பேட்டிங் ஃபார்ம் நிச்சயம் மோசமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவரது கேப்டன்ஷியில் 83% வெற்றி வந்திருக்கிறது”
” எல்லா டி20 அணியின் கேப்டன்களாலும் இதை செய்து விட முடியாது. சூரியகுமார் இதை சிறப்பான முறையில் செய்து இருக்கிறார். மேலும் தென் ஆப்பிரிக்கா அணி இந்த டி20 தொடரில் நல்ல அழுத்தம் கொடுத்திருக்கிறது. இருந்த போதும் இரண்டாவது போட்டியில் தோற்றபிறகு மூன்றாவது போட்டியில் வந்து வென்று தொடரில் முன்னிலையில் இருக்கிறார்கள்”
சூரியகுமார் இதை மாற்ற வேண்டும்
“சூரியகுமாரின் பலம் விக்கெட்டுக்கு நேர் எதிராக விளையாடுவது. அவர் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கால்களை நகர்த்தி விளையாடுவதில்லை. இதை அணிகள் பயன்படுத்திக்கொள்ள பார்க்கின்றன. மேலும் பந்தின் வேகத்தை ஒரே போல வீசுவதில்லை. நிறைய மெதுவான பந்துகளை வீசுகிறார்கள். எனவே அவர் இதையும் எதிர்கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : ஜோஸ் இங்லீஷ் எங்க பஞ்சாப் டீமுக்கு செஞ்சது நியாயம் அல்ல.. 45 நிமிஷத்துக்கு முன்ன அது – உரிமையாளர் பேச்சு
” மேலும் அவர் தனக்கு பிடித்தமான முறையில் சீக்கிரத்தில் விளையாட ஆரம்பித்து விடுகிறார். எனவே அவர் இதற்கு கொஞ்சம் நேரம் கொடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர் தனது கால்களை முன்னோக்கி எடுத்துச் சென்று கொஞ்ச நேரம் நேராக விளையாட வேண்டும். டி20 உலகக் கோப்பை நெருங்கிவிட்ட நிலையில் இந்த மாற்றத்தை அவரால் செய்து கொள்ள முடியுமா? என்று பார்க்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






