இந்திய கிரிக்கெட்

2 விஷயத்துக்கு வாய்ப்பும் எதிர்காலமும் இல்லனு தெரிஞ்சது.. உடனே ஓய்வை அறிவித்தேன் – அஸ்வின் பேட்டி

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து தான் பாதியில் ஓய்வு பெற்றதற்கான காரணம் குறித்து இந்திய நட்சத்திர முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். மேலும் தொடரின் பாதியில் இருந்தும் உடனுக்குடன் நாடு திரும்பிவிட்டார்.

யூகங்களை கிளப்பிய முடிவு

அஸ்வின் இப்படி திடீரென தொடரின் பாதையில் இருந்து ஓய்வு பெற்றதன் காரணமாக பல்வேறு யூகங்கள் வெளியில் சென்றன. அணியில் அவருக்கு சரியாக மரியாதை கொடுக்கப்படவில்லை, வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுத்ததால் அவர் வெளியேறி வந்து விட்டார் என்று பலவாறு பேசப்பட்டது. தற்போது இதற்கு அஸ்வின் பதில் அளித்து இருக்கிறார்.

இதுகுறித்து அஸ்வின் பேசும்பொழுது “நான் சில முறை இந்த விஷயங்களை சிந்தித்துப் பார்த்தேன். நான் எழுந்து பார்க்கும் பொழுது எனது படைப்பு பக்கத்திற்கான எதிர்காலமும் திசையும் இல்லை என்பதை உணர்ந்தேன். அப்படி ஒருநாள் வந்தால் நான் ஓய்வு பெற்று விடுவேன் என்று முடிவு செய்து இருந்தேன். அந்த நாள் வந்தது நான் எனது ஓய்வு முடிவை அறிவித்து விட்டேன்”

- Advertisement -

நான் எதையும் பிடித்து வைப்பதில்லை

“நான் எதையும் வாழ்க்கையில் பிடித்து வைத்துக் கொள்ளும் நபராக இருந்ததில்லை. மேலும் நான் வாழ்க்கையில் பாதுகாப்பாற்ற உணர்வுடன் ஒரு நாளும் இருந்ததில்லை. இன்று என்னுடையதாக இருப்பது நாளை இன்னொருவருடையதாக மாறும். இந்த புரிதல் என்னை உயர்த்தும் காரணிகளில் ஒன்றாக இதுநாள் வரையில் இருந்திருக்கலாம்”

இதையும் படிங்க : நியூஸி ODI.. இலங்கை அணி அறிவிப்பு.. ஐபிஎல் அன் கேப்ட் வீரருக்கு வாய்ப்பு.. முக்கிய வீரர் வருகை

“நான் முடிந்த வரையில் என் குறித்தான விஷயங்களை விட்டு விடவே முடிவு செய்தேன். காரணம் மக்கள் என்னை கொண்டாடுவது குறித்து எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது கிடையாது. இந்தியாவில் சில நேரம் நமக்கு கிடைக்கும் கவனத்தை நான் நம்பவும் இல்லை. மேலும் இந்த விளையாட்டு எதையும் எதார்த்தத்துடன் அணுகுகின்ற முறையை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Ravi Ashwin