இந்திய கிரிக்கெட்

முகமது ஷமியை தெஆ டெஸ்ட் தொடருக்கு ஏன் தேர்வு செய்யவில்லை?.. ரகசியத்தை உடைத்த அஸ்வின் – வெளியான தகவல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. அவர் தொடர்ந்து ஏன் தேர்வு செய்யப்படவில்லை? அதன் பின்னணி காரணம் என்ன? என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் என்ற இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெற்றார். அதற்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்து 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த பொழுது தேர்வு செய்யப்படவில்லை.

மொத்தமாக முழு புறக்கணிப்பு

இந்திய வெள்ளை பந்து அணியில் இடம் பெற்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய காரணத்தினால், டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படாவிட்டாலும் கூட குறைந்தபட்சம் இந்திய ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

மேலும் தற்போது ரஞ்சி தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசி விக்கெட் கைப்பற்றி வருகின்ற காரணத்தினால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அதற்கும் அவரை தேர்வு செய்யவில்லை.

- Advertisement -

காரணம் என்ன?

முகமது ஷமியை தொடர்ந்து இந்திய அணியில் தேர்வு செய்யாமல் இருந்து வருவதற்கான காரணம் என்னவென்று பேசி இருந்த அஸ்வின் “முகமது ஷமி ரஞ்சி டிராபி செயல்பாட்டை நம்பராக எடுத்துப் பார்த்தால் அவர் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசி விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். சந்தேகமும் கிடையாது”

இதையும் படிங்க: தெஆ ஏ ODI தொடர்.. திலக் வர்மா கேப்டன்.. ருதுராஜுக்கு இடம்.. அபிஷேக் சர்மா முதல் தரமான அணி

“ஆனால் அவர் களத்தில் எவ்வளவு நேரம் ஃபீலிங் நிற்கிறார்? என்று தெரிய வேண்டும். அவரால் ஒரு நாளுக்கு இருபது ஓவர்கள் பந்து வீச முடியுமா? என்று தெரிய வேண்டும். அந்த அளவிற்கு அவர் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டும்தான் இந்திய அணிக்கு தேர்வு செய்வார்கள். அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று திரும்பி வந்து பந்து வீசிக் கொண்டு இருந்தால் தேர்வு செய்ய மாட்டார்கள். இது முழுமையாக ரஞ்சி கிரிக்கெட்டை அவர் விளையாடும் போது பார்த்தால்தான் தெரியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by