இந்தியா வந்திருக்கும் தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு திலக் வர்மா தலைமையில் இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது இந்தியா வந்திருக்கும் தென் ஆப்பிரிக்க ஏ அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது.
ஒருநாள் தொடர் அட்டவணை
இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கு இந்திய அணி திலக் வர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு துணை கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் இந்த தொடர் நவம்பர் 13, 16, 19 ஆகிய தேதிகளில் போன்று போட்டிகளும் குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கும் வெள்ளை பந்து தொடருக்கு இந்திய அணிக்கு சிறந்த பயிற்சியாக அமையும்.
இடம்பெற்றுள்ள நட்சத்திர வீரர்கள்
மேலும் இந்த அணியில் நட்சத்திர வீரர்களான அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், ஹர்ஷித் ராணா, அர்ஸ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் இடம் பெறுகிறார்கள். மேலும் இவர்களுடன் ஐபிஎல் தொடரில் பிரபலமான பிரப்சிம்ரன் சிங், ஆயுஷ் பதோனி, கலீல் அகமத் ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இதையும் படிங்க : தெ.ஆ டெஸ்ட் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு.. திரும்பிய ஸ்டார் வீரர்.. ஷமிக்கு தொடர் சோகம்
இந்திய ஏ ஒருநாள் அணி:
திலக் வர்மா (கே)
ருதுராஜ் கெய்க்வாட் (துகே)
அபிஷேக் சர்மா
பிரப்சிம்ரன் சிங் (விகீ)
ரியான் பராக்
இஷான் கிஷான் (விகீ)
ஆயுஷ் பதோனி
நிஷாந்த் சிந்து
விப்ராஜ் நிகம்
மனவ் சுதர்
ஹர்ஷித் ராணா
அர்ஷ்தீப் சிங்
பிரசித் கிருஷ்ணா
கலீல் அகமது






