அபிஷேக் வீக்னஸ ஐபிஎல்ல என் பவுலிங்ல பார்த்தேன்.. அதைத்தான் இப்ப மத்தவங்க செய்றாங்க – அஸ்வின் பேச்சு

0
4
Ashwin

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அபிஷேக் சர்மாவுக்கு தற்பொழுது பேட்டிங் பலவீனம் என்ன இருக்கிறது என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து டக் அவுட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருக்கு பேட்டிங்கில் என்ன பலவீனம் இருக்கிறது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து உதாரணம் காட்டியிருக்கிறார்.

- Advertisement -

இது மாறப்போவதில்லை

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய டி20 அணியின் அபாயகரமான தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் சர்மா மாறி வந்தார். எனவே உலகக்கோப்பை தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மூன்று டக் அவுட் ஆகி இருக்கிறார்.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு கிடையாது. அவர் எப்பொழுதுமே இப்படித்தான் விளையாடுவார். ஆனால் இது மனதில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆனால் அவர் ரன்கள் எடுத்து இதிலிருந்து வெளியில் வருவார். தொடர்ந்து மூன்று முறை அவர் டக் அவுட் ஆகி இருந்தாலும் அவர் எவ்வளவு ஆபத்தான பேட்ஸ்மேன் என்பதை அது மாற்றப் போவது கிடையாது”

- Advertisement -

பலவீனம் இதுதான்

“அபிஷேக் பொதுவாக முன் காலை விலக்கி வைத்து பந்தை அடிப்பார். அதனால் அவருக்கு ஆப் ஸ்பின் வீசுவது இப்பொழுது ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. அது எப்படி என்றால் அவர் உடலுக்குள் பந்து இருக்கும்படி வீசுகிறார்கள். மேலும் நின்ற இடத்தில் இருந்து தூக்கி அடிக்க முடியாத லென்த்தில் வீசுகிறார்கள். இதனால் அவர் முன் காலை விலக்கி குறுக்காக அடிக்கப் போகிறார். இதனால் அவருக்கு நேரம் கிடைக்காமல் ஆட்டம் இழக்கிறார்”

இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தி மும்பையா இருந்திருந்தா வெறித்தனமா கொண்டாடுவீங்க.. இது நியாயம் இல்ல – ஸ்ரீகாந்த் விமர்சனம்

“நான் ராஜஸ்தான் அணியில் இருந்த பொழுது ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு பந்து வீசி இருந்தேன். அப்பொழுது நான் வீசிய ஓவர்களில் பெரிய அளவு ரன் போகவில்லை. இதே போல எனக்கு அவர் விளையாட முயன்று அவுட் ஆகும் வாய்ப்பிலிருந்து தப்பித்தார். ஆனாலும் அவரால் ரன் அடிக்க முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -