15 வீரர்கள் கொண்ட அணியை தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு உரிமை கிடையாது – கடைசி நேரத்தில் உண்மையை உடைத்த ரவி சாஸ்திரி

0
128
Ravi Shastri and Virat Kohli

இந்திய அணி டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அதேபோல கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளராக விளங்கிய ரவி சாஸ்திரியும் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளர்களுள் ஒருவராக வலம் வந்த ரவி சாஸ்திரி தற்போது அதிர்ச்சியான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

ரிபப்ளிக் தொலைக்காட்சியில் பேட்டி அளித்த ரவிசாஸ்திரி தேர்வு குழுவினர் எந்த 15 வீரர்களை தேர்வு செய்யப் போகிறார்கள் என்பது பயிற்சியாளர் மற்றும் கேப்டன் என யாருக்குமே தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் 15 வீரர்களை தேர்வு செய்யும் போது யாரும் கேப்டனிடமோ அல்லது பயிற்சியாளரிடமோ கருத்து கேட்பது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆட்டத்திற்கான 11 பேரை தேர்வு செய்யும் போதுதான் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இணைந்து முடிவு செய்வதாக அவர் கூறினார்.

- Advertisement -

மேலும் விராத் கோலி கேப்டனாக இருந்தபோது மிகச் சிறப்பாக செயல்பட்டதாகவும் யாராலும் நம்ப முடியாத அளவுக்கான சாதனைகளை அவர் தன் வசப்படுத்தி உள்ளதாகவும் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இந்தியா டுடே பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் விராட் கோலியின் கேப்டன் காலம் குறித்து இவ்வாறு கூறியுள்ளார். மேலும் விராட் கோலியின் உடற்தகுதி குறித்து அவர் மிகவும் பெருமையாக பேசி உள்ளார். கோலி வெற்றியின் மீது எப்போதும் பசியுடன் இருப்பதாக ரவி சாஸ்திரி கூறினார். அணியில் இருக்கும் மற்ற வீரர்களை தன்னை உடற் தகுதியில் சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் முனைப்பு காட்டியதாகவும் வெற்றியின் மீது அவருக்கு இருந்த தீராத ஆசைதான் அவரது இந்த சிறப்பு மிகுந்த வெற்றிகளுக்கு காரணம் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்டு சரியாக ஒரு வார காலத்தில் விராத் கோஹ்லி கேப்டன் பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் போவதாக கூறினார். கேப்டனாக இருந்தார் கோழியின் கழுத்தை தேர்வுக்குழுவினர் புறக்கணித்ததால் இந்த முடிவை அவர் எடுத்திருக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்குமோ என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.