5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கமண்டேட்டராக களமிறங்கும் ரவி சாஸ்திரி ; முன்னாள் சி.எஸ்.கே வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் வாய்ப்பு

0
209
Ravi Shastri and Suresh Raina

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறாத நிலையில் மீண்டும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற போகிறது. இதனால் இந்திய ரசிகர்கள் அனைவரும் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கின்றது.

வருகிற மார்ச் 26ஆம் தேதி இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் துவங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளனர். மார்ச் 26ம் தேதி துவங்கி மே மாதம் 29ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வர்ணனையாளராக களமிறங்கும் சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் முதன்முதலாக 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றியது. அந்தாண்டு சென்னை அணிக்காக 16 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 520 ரன்கள் சுரேஷ் ரெய்னா குவித்தார். அதேபோல 2011ம் ஆண்டு சென்னை அணி இரண்டாவது கோப்பையை கைப்பற்றிய போது 16 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 438 ரன்கள் குவித்தார். 2018 மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே கைப்பற்றிய வருடமும் சுரேஷ் ரெய்னா 15 போட்டிகளில் நான்கு அரைச் சதங்களுடன் 445 ரன்கள் குவித்தார்.

அதேபோல 2008 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் சுரேஷ் ரெய்னா மட்டுமே. மிஸ்டர் ஐபிஎல் என்று சொல்லுமளவுக்கு தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்த ரெய்னா கடந்த ஆண்டு 12 போட்டிகளில் விளையாடி 160 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார்.

அதன் காரணமாக சென்னை அணி அவரை இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு தக்க வைத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த ஏலத்தில் அவரை வாங்க முயற்சி கூட செய்யவில்லை. சென்னை அணி மட்டுமின்றி மற்ற அனைவரும் இவரை வாங்க முன்வரவில்லை.

- Advertisement -

முதல் முறையாக சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களம் இறங்கப் போவதில்லை. ஆனால் இந்த ஆண்டு சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் பங்கேற்க போகிறார் என்கிற செய்தி நமக்குக் கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகள் வீரராக விளையாடி வந்த அவர் இந்த வருடம் வர்ணனையாளராக தனது பணியை செய்ய காத்திருப்பதாக தகவல் உறுதியாகியுள்ளது.

ஒருபக்கம் சுரேஷ் அண்ணா வர்ணனையாளராக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தோசமான செய்தி என்றாலும், ஆண்டு ஆண்டுகளாக மிக சிறப்பாக விளையாடி வந்த திடீரென வர்ணனையாளராக மாறியது அவரது ரசிகர்கள் அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா வர்ணனையாளராக போட்டிகளை தொகுத்து வழங்கப் போகிறார். அதேபோல முன்னாள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஐபிஎல் தொடர் சம்பந்தமாக நடக்க இருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் முன் நிகழ்ச்சிகளில்(ஆங்கில விவாதம்) கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.