நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் சிறுவன் 14 வயதான வைபவ் சூரியவன்சி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்தில் அதிரடி சதம் அடித்திருந்தார். இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு முக்கியமான எச்சரிக்கையை செய்திருக்கிறார்.
உலக டி20 தொடர்களில் தரம் மற்றும் வியாபாரத்தில் முதலிடத்தில் இருக்கும் ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருக்கும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 14 வயது சிறுவன் அதுவும் வெறும் 35 பந்தில் சதம் அடித்தது கிரிக்கெட் உலகில் இப்பொழுது வரை பெரிய ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வைபவ் சூரியவன்சி விளையாடிய விதம் குறித்து மனம் திறந்து பாராட்டி இருக்கிறார். தங்கள் ஆஸ்திரேலியா அணியில் கில்கிறிஸ்ட் விளையாடும் பொழுது அவர் எந்த பந்தையும் தவற விடக்கூடாது என்று தாங்கள் நினைப்போம் என்றும், அதுபோலவே இந்த சிறுவன் தன்னை நினைக்க வைத்து விட்டார் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் செய்திருக்கும் காரியம் மிகப்பெரியது, அவருக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என மனம் திறந்து பாராட்டி இருந்தார். இந்த நிலையில் வைபவ் சூரியவன்சியின் பயிற்சியாளர் மனிஷ் ஓஜா யுவராஜ் சிங் மற்றும் லாராவின் கலவை என்று கூறியிருந்தார். இப்படி பலர் பாராட்டிக் கொண்டிருக்கும் நிலையில் ரவி சாஸ்திரி தற்போது எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “அவர் லக்னோ அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் விளையாடிய முதல் ஷாட் எல்லோரையும் மூச்சடைய வைத்திருக்கும். அவர் தற்போது மிகவும் இளமையாக இருக்கிறார். எனவே அவரை நாம் விளையாட விட வேண்டும். ஏனென்றால் இந்த வயதில் தோல்வியும் வரும். மேலும் அவருக்கு எதிராக மக்கள் நிறைய விஷயங்களை கொண்டு வருவார்கள். எனவே அவர் தோல்வியையும் கையாள வேண்டும்”
இதையும் படிங்க : நான் தூங்குறப்ப பாண்டிங் மெசேஜ் பண்ணார்.. ஆனா முதல்ல காப்பாற்றியது சச்சின்தான் – பிரப்சிம்ரன் சிங் பேட்டி
“அடுத்த முறை அவர் பேட்டிங் செய்ய வரும் பொழுது அவருக்கு பல மாதிரியான பந்துகள் வீசப்படும். ஏனென்றால் நீங்கள் முதல் பந்தலையே சிக்ஸர் அடித்தால் உங்களுக்கு யாரும் கருணை காட்ட மாட்டார்கள். உங்களுடைய வயது 10, 14 இல்லை 24 என்று பார்க்க மாட்டார்கள். இங்கு சாப்பிடுவதற்கு அனைவருக்கும் ஒரே மெனுதான். அவர் இதற்கு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் எப்படி இதை கையாளுகிறார் என்பதை பொறுத்து தீர்ப்பு வழங்கலாம்” என்று கூறியிருக்கிறார்.