இந்திய கிரிக்கெட்

விராட் கோலி கேப்டனாக இருந்தார்.. ஆனா அந்த விஷயத்துக்கு டீமை சம்மதிக்க வச்சது தோனி – ரவி சாஸ்திரி தகவல்

இந்திய கிரிக்கெட்டில் வீரர்களை உடல் தகுதியில் மேம்படுத்த எந்த அளவிற்கு கடினப்பட வேண்டி இருந்தது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் கேப்டனாக விராட் கோலி இருந்த காலகட்டத்தில் தான் இந்திய வீரர்களின் உடல் தகுதி மிகவும் கட்டாயமான ஒன்றாக கொண்டுவரப்பட்டது. இது அந்த நேரத்தில் பலராலும் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் தகுதியில் வந்த விமர்சனம்

இந்திய அணியில் உடல் தகுதிக்கு யோயோ டெஸ்ட் 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 16.2 புள்ளிகள் எடுப்பவர்கள் தேர்வாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் நியூசிலாந்து கிரிக்கெட்டில் 19 எனவும், ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் 18 எனவும் இந்த அளவு மிகவும் உச்சத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் முறையாக இந்த உடல் தகுதி முறையை இந்திய அணியில் கொண்டு வந்த பொழுது, இதில் பங்கேற்க பல இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். ஏனென்றால் அவர்களால் இதில் தேர்வாக முடியாது என்று உணர்ந்தார்கள். மேலும் கிரிக்கெட் விளையாட்டுக்கும் தடகள விளையாட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது எனவே இந்த உடல் தகுதி டெஸ்ட் தேவையில்லை என சில முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை முன் வைத்தார்கள்.

- Advertisement -

தோனிதான் முதலில் அறிவுறுத்தினார்

இது குறித்து ரவி சாஸ்திரி பேசும் பொழுது “இந்த உடல் தகுதி தேர்வுக்கு வீரர்களை சம்மதிக்க வைக்க பெரிய சவாலாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் தேர்வாக மாட்டார்கள் என அவர்களே நினைத்தார்கள். ஒரு மேட்ச் வின்னர்கள் இருக்கும் பொழுது அவர்களுக்கு சில சலுகைகள் கொடுக்கலாம். அது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தேர்வு செய்கின்ற விஷயம்”

இதையும் படிங்க : பைனலில் இந்த இந்திய வீரர்தான் பெரிய பிரச்சனை.. அவர சமாளிக்கணும் – நியூஸி கோச் பேச்சு

“ஆனால் மொத்த அணிக்கும் பொதுவான செய்தி நீங்கள் உடல் தகுதியுடன் இருங்கள் இல்லை என்றால் வெளியேறுங்கள் என்பதுதான்.இதில் பங்கேற்க வீரர்கள் பெரிய தயக்கம் காட்டினார்கள். அப்பொழுது விராட் கோலி கேப்டனாக இருந்தார். அப்பொழுது தோனிதான் டீம் மீட்டிங் போது நாம் இப்பொழுதே இதற்கு தயாராகும் பங்கேற்போம் என்று கூறினார் என்பது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. பின்புதான் இது அணிக்குள் நடைமுறைக்கு வந்தது. இது இலங்கை சுற்றுப்பயணத்தில் தம்புல்லா மைதானத்தில் நடந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts